ஐபிஓ வெளியீட்டில் மோசடி; பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனருக்கு செபி நோட்டீஸ்
பேடிஎம்மின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா மற்றும் நவம்பர் 2021இல் அதன் ஆரம்ப பொதுப் பங்கீட்டின் போது பணியாற்றிய போர்டு உறுப்பினர்களுக்கு இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐபிஓ வெளியிட்டீன்போது உண்மைகளைத் தவறாகக் கூறியதற்காக இந்த ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரமோட்டர் வகைப்பாடு விதிமுறைகளை விஜய் சேகர் ஷர்மா கடைப்பிடிக்கவில்லை என்று அந்த அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி விசாரணைக்கான தரவுகளை வழங்கியது என்று அறிக்கை மேலும் கூறியது.
செபி குற்றச்சாட்டு
விஜய் சேகர் ஷர்மா ஒரு புரமோட்டராக வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை செபி எடுத்துக்கொள்கிறது. மேலும் நிறுவனர் கூறிய கூற்றுகளின் துல்லியத்தை சரிபார்க்க வேண்டியது நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் நம்பிக்கைக்குரிய கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செபி கடந்த காலத்தில் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்களை குற்றம்சாட்டினாலும், அவை பெரும்பாலும் நிதி மோசடி வழக்குகளாகத்தான் இருந்துள்ளன. வங்கியாளர்கள் அல்லது சட்டப்பூர்வ தணிக்கையாளர்களால் சுட்டிக்காட்டப்படாத, சாத்தியமான இணக்கக் குறைபாட்டிற்கு இயக்குநர்களை பொறுப்பாக்க செபி முயற்சிக்கும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக இது உள்ளது. 2021லேயே செபி இதுகுறித்து அறிந்திருந்தும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தடை செய்யப்பட பிறகுதான் நடவடிக்கையைத் தொடங்கியது எனக் கூறப்படுகிறது.