அமெரிக்கா: செய்தி
நியூயார்க் நகரின் புதிய முதல் பெண்மணி: ஜோஹ்ரான் மாம்டானியின் மனைவி ரமா துவாஜி யார்?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் அரசியல்வாதி ஜோஹ்ரான் மாம்டானி, நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கா- இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன; இரு தலைவர்களும் நல்ல உறவில் இருக்கின்றனர்: வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே தொடர்ச்சியான மற்றும் நெருக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
வரலாற்று வெற்றி! நியூயார்க் மேயரானார் இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மாம்டானி
அமெரிக்காவின் நிதி மற்றும் கலாச்சார தலைநகரமான நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மாம்டானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
"ஹமாஸுடன் தொடர்புடைய CAIR அமைப்பு தான் நியூயார்க் மேயர் வேட்பாளர் ஜோஹ்ரன் மாம்தாணிக்கு நிதி வழங்குகிறது": சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சோசலிச வேட்பாளரான ஜோஹ்ரன் மாம்தாணி (Zohran Mamdani) குறித்த முக்கிய நிதி விவகாரங்களை சமூக ஆர்வலர் லிண்டா சௌர்சோர் வெளிப்படுத்தியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
ஆங்கில புலமைத் தேர்வு நடத்தி 7,000க்கும் மேற்பட்ட இந்திய லாரி ஓட்டுநர்களை பணி நீக்கம் செய்த அமெரிக்கா
அமெரிக்காவில் கட்டாயமாக்கப்பட்ட ஆங்கில மொழிப் புலமை தேர்வுகளில் தோல்வியடைந்த காரணத்தால், 7,000-க்கும் மேற்பட்ட சரக்கு லாரி ஓட்டுநர்கள் பணி செய்ய தகுதியற்றவர்களாக நீக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சீனா, பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை செய்வதாக டிரம்ப் கூறியதால் இந்தியாவுக்கு சிக்கலா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
H-1B கட்டண உயர்வை விட, இந்த அமெரிக்க விதி தான் இந்தியாவிற்கு ஆபத்தானது
முன்னாள் ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க முன்மொழிந்துள்ள சட்டமான ஹெல்ப் இன்-சோர்சிங் மற்றும் ரிபேட்ரியட்டிங் எம்ப்ளாய்மென்ட் (HIRE) சட்டம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார்.
NVIDIAவின் சிறந்த AI சிப்கள் அமெரிக்காவிற்கு வெளியே கிடைக்காது: டிரம்ப்
தொழில்நுட்ப நிறுவனமான NVIDIA- வின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
'பாகிஸ்தான், சீனா அணு ஆயுத சோதனை செய்கின்றன; அமெரிக்காவும் அதைச் செய்ய வேண்டும்': டிரம்ப்
பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
'உலகை 150 முறை தகர்க்க போதுமான அணுகுண்டுகள் நம்மிடம் உள்ளன': எச்சரிக்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதற்கான தனது முடிவை ஆதரித்து, வாஷிங்டன் மட்டுமே தனது ஆயுதங்களை சோதிக்காத நாடாக இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்; அமெரிக்கா-சீனா உறவு குறித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தனது சந்திப்பு இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்ததாக அமைந்தது என்றும், இது இரு நாடுகளுக்கிடையே நிலையான அமைதி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
500 மில்லியன் டாலர் கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழில்முனைவோர் பாங்கிம் பிரம்மபட் மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தொலைத்தொடர்பு தொழில்முனைவோரான பாங்கிம் பிரம்மபட், சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள மிகப் பெரிய கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய சகாப்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று கையெழுத்தானது.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பால் இந்திய பங்குச் சந்தைக்கு சாதகமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து, அதை 3.75% முதல் 4.00% என்ற வரம்புக்குக் கொண்டு வந்தது. இது சந்தை எதிர்பார்த்த ஒரு நடவடிக்கையாகும்.
இறங்கி வந்த அமெரிக்கா; இந்தியாவை தாஜா செய்ய சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான பொருளாதாரத் தடை விலக்கு நீட்டிப்பு
இந்தியாவின் மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான இணைப்பு முயற்சிகளுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சபஹார் துறைமுகத் திட்டத்திற்கான (Chabahar Port) பொருளாதாரத் தடை விலக்கு காலத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று சீனாவுடனான வர்த்தகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒரு முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார்.
அமெரிக்காவில் தானியங்கி பணி அனுமதி நீட்டிப்பு ரத்து: ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு!
அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களுக்கான பணி அங்கீகார ஆவணங்களின் (Employment Authorization Documents - EADs) தானியங்கி நீட்டிப்பு முறையை (Automatic Extension) முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை (Department of Homeland Security - DHS) அறிவித்துள்ளது.
30 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த அணு ஆயுதச் சோதனைகளை உடனடியாகத் தொடங்க டிரம்ப் உத்தரவு!
உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு: 6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான முக்கியமான சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் இன்று (அக்டோபர் 30, 2025) நடைபெற்றது.
காசா மீது 'உடனடி, சக்திவாய்ந்த' தாக்குதலுக்கு நெதன்யாகு உத்தரவு! முறிவடைந்த போர் நிறுத்தம்?
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மத்தியில், இஸ்ரேலியப் படைகள் காசா மீது உடனடியாகவும், 'சக்திவாய்ந்த' முறையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
மெலிசா சூறாவளி: உலகத்தின் அதி தீவிரமான புயல் ஜமைக்காவை தாக்க வருகிறது
"மெலிசா" சூறாவளி மிக வேகமாக தீவிரமடைந்து, மணிக்கு 175 மைல் (280 கிமீ/மணி) வேகத்தில், அரிய வகை 5 ஆக வலுவடைந்து, இந்த ஆண்டின் பூமியின் வலிமையான புயலாக மாறியுள்ளது.
அமெரிக்க பிரதமர் டிரம்ப், ஜப்பானின் தகைச்சி ஆகியோர் முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சியும் முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் அதிகரிப்பால் பீதி
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் (USO) கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் உறவுகளைப் பாதிக்காமல் பாகிஸ்தானுடன் பிணைப்பை வலுப்படுத்த முயல்கிறதாம் அமெரிக்கா
ஐக்கிய நாடுகளின் அமெரிக்க வெளியுறவு செயலாளரான மார்கோ ரூபியோ, பாகிஸ்தானுடன் அதன் மூலோபாய உறவை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா பார்க்கிறது.
கனடா மீதான வர்த்தகப் போரை அதிகரிக்கும் அமெரிக்கா: கூடுதலாக 10% வரி விதிப்பு
அமெரிக்காவிற்கு கனடாவிற்கும் இடையேயான வர்த்தக பதட்டங்களை கணிசமாக அதிகரிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (அக்டோபர் 25) கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பதாக அறிவித்தார்.
முஷாரஃபை விலைக்கு வாங்கி பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அமெரிக்கா கட்டுப்படுத்தியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்கள் பெரும்பாலும் இந்த 10 நகரங்களில் வசிக்கிறார்கள்
செல்வ நுண்ணறிவு தளமான Altrata-வின் சமீபத்திய அறிக்கை, உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட முதல் 10 நகரங்களில் ஏழு அமெரிக்காவில் இருப்பதாக காட்டுகிறது.
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை டிரம்ப் முறித்துக் கொள்ள காரணமான தொலைக்காட்சி விளம்பரம்
முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரிகள் குறித்து எதிர்மறையாக பேசிய விளம்பரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் முடித்துக்கொண்டார்.
உங்கள் அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்: அமெரிக்காவின் தடைகளுக்கு அதிபர் புடின் கண்டனம்
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்க தடைகளுக்கு கடுமையான எதிர்வினையாக, வாஷிங்டன் அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் மாஸ்கோ ஒருபோதும் அடிபணியாது என்று அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்தார்.
அமெரிக்க தடைகள் அமலுக்கு வந்ததால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்திய நிறுவனங்கள் திட்டம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா விதித்த புதிய தடைகளை தொடர்ந்து, இந்தியா தனது மிகப்பெரிய சப்ளையரான ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கடுமையாக குறைக்கும் என்று வியாழக்கிழமை ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
இரண்டு ஜனநாயகங்கள் உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்யட்டும்: தீபாவளி வாழ்த்துக்கு டிரம்பிற்கு பிரதமர் நன்றி
தீபாவளி வாழ்த்துக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு புதன்கிழமை நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள்" தொடர்ந்து உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்ய வேண்டும் என்று தனது பதிவில் நன்றி தெரிவித்தார்.
மோடிக்கு பாராட்டுகளும், ரஷ்ய எண்ணெய் குறித்த மறு வாதமும்: தீபாவளியை முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் சொன்னது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில், தனது நிர்வாகத்தில் உள்ள இந்திய-அமெரிக்க உறுப்பினர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
தற்போதைய எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் இல்லை; அமெரிக்கா விளக்கம்
இந்தியப் பணியாளர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் (USCIS) ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
ஜி ஜின்பிங் சந்திப்புக்கு முன்னதாக சீனாவிற்கு 155% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டனுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் செய்யத் தவறினால், சீனப் பொருட்களுக்குக் கடுமையான 155 சதவீத வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா தொடர்ந்து அதிகபட்ச வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஒரே நாளில் 2500 இடங்களில் போராட்டங்கள்
அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உட்படப் பல நகரங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய கொள்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய 'ராஜாவே வேண்டாம்' (No Kings) பேரணிகள் நடைபெற்றன.
இந்திய ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை முழுமையாக நிறுத்துவதாகத் தனக்கு உறுதியளித்ததாக மீண்டும் கூறியுள்ளார்.
இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
நவம்பர் 1 முதல் புதிய விதி அமல்: US விசா நேர்காணலை வெளிநாடுகளில் திட்டமிடுவது கடினம்
அமெரிக்க குடியேற்ற (Immigrant) மற்றும் குடியேற்றமற்ற (Non-Immigrant) விசா நேர்காணல்களை விண்ணப்பதாரர்கள் இனி தங்கள் சொந்த நாட்டில் அல்லது நிரந்தர வசிப்பிடத்தில் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.