"ஹமாஸுடன் தொடர்புடைய CAIR அமைப்பு தான் நியூயார்க் மேயர் வேட்பாளர் ஜோஹ்ரன் மாம்தாணிக்கு நிதி வழங்குகிறது": சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சோசலிச வேட்பாளரான ஜோஹ்ரன் மாம்தாணி (Zohran Mamdani) குறித்த முக்கிய நிதி விவகாரங்களை சமூக ஆர்வலர் லிண்டா சௌர்சோர் வெளிப்படுத்தியதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அவரது கூற்றின்படி, இஸ்ரேலுக்கு எதிராகப் பேசுவதற்காகவும், பாலஸ்தீனத்தின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் அமைப்பான Council on American-Islamic Relations-CAIR, ஜோஹ்ரன் மாம்தாணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு $120,000 நிதி அளித்ததாக லிண்டா சௌர்சோர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஹ்ரன் மாம்தாணிக்கு அரசியல் வழிகாட்டியாகவும் இருந்த சர்சூர், தானும் ஹமாஸுடன் தொடர்புடைய லாப நோக்கற்ற நிறுவனமும் மம்தானியின் எழுச்சிக்கு உந்துசக்தியாக உதவியதாக பெருமையாக கூறியதாக தி நியூயார்க் போஸ்ட்டில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது.
எதிர்வினை
ஜோஹ்ரன் மாம்தாணியின் எதிர்வினை
இந்தக் குற்றச்சாட்டுகளை ஜோஹ்ரன் மாம்தாணி மறுத்துள்ளார். CAIR அமைப்பு தனக்கு நிதியுதவி அளித்ததாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும், இது ஒரு பொது அவதூறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி விவகாரம் நியூயார்க் மேயர் தேர்தலுக்கு முன்னதாக, வேட்பாளர் மாம்தாணியை சுற்றியுள்ள சர்ச்சைகளையும், அரசியல் ரீதியான மோதல்களையும் அதிகரித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள், மாம்தாணிக்கு எதிராக அவரது அரசியல் எதிரிகளால் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நியூயார்க் நகர மேயர் போட்டியில் ஆண்ட்ரூ கியூமோவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார், முன்னணி வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானியை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார்.