LOADING...
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்; அமெரிக்கா-சீனா உறவு குறித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு
சீனா குறித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு

கடவுள் ஆசீர்வதிக்கட்டும்; அமெரிக்கா-சீனா உறவு குறித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2025
08:08 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தனது சந்திப்பு இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்ததாக அமைந்தது என்றும், இது இரு நாடுகளுக்கிடையே நிலையான அமைதி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "கடவுள் சீனா மற்றும் அமெரிக்கா இரண்டையும் ஆசீர்வதிக்கட்டும்!" என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். தென் கொரியாவின் பூசானில் நடந்த ஜி2 கூட்டத்தில் இரு தலைவர்களும் சந்தித்த நிலையில், டிரம்ப் ஒரு முக்கிய முடிவை அறிவித்தார். தொடர்ந்து நிலவி வந்த வர்த்தகப் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், அமெரிக்கா சீனப் பொருட்கள் மீதான வரியை 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

ரேர் எர்த்

அமெரிக்காவுக்கு ரேர் எர்த் ஏற்றுமதிக்கு சீனா அனுமதி 

ரேர் எர்த் மினரல்ஸ் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வு காணப்பட்டுவிட்டது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டிரம்பின் இந்த முடிவைச் சீனா வரவேற்றுள்ளதுடன், இரு நாடுகளும் இணைந்து உலகின் நன்மைக்காக உழைக்க முடியும் என்று ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட்டு வருவதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் சீனா தலைவர்கள் ராணுவம்-ராணுவம் இடையேயான தகவல் தொடர்பு வழித்தடங்களை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இதன்மூலம் எழக்கூடிய எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தணிக்கவும், பதற்றத்தைக் குறைக்கவும் முடியும். அமெரிக்கப் போர்த் துறையின் செயலாளர் பீட் ஹெக்செத், இந்தச் சந்திப்பு நிலையான அமைதி மற்றும் வெற்றிக்கு ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளது என்று குறிப்பிட்டு, தங்கள் உறவு எப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.