LOADING...
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் அதிகரிப்பால் பீதி
அமெரிக்கக் கடலோரத்தில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் அதிகரிப்பால் பீதி

அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் அதிகரிப்பால் பீதி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 27, 2025
03:11 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் (USO) கணிசமாக அதிகரித்துள்ளது. இது விஞ்ஞானிகள் மற்றும் ராணுவப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளாவிய மர்மப் பொருட்களின் (UFO) பதிவுகளைப் பராமரிக்கும் எனிமா என்ற கண்காணிப்பு செயலியின்படி, ஆகஸ்ட் மாத நிலவரப்படி அமெரிக்கக் கடலோரப் பகுதிகள் அல்லது முக்கிய நீர்நிலைகளுக்கு 10 மைல்களுக்குள்ளாக 9,000 க்கும் மேற்பட்ட அசாதாரண நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 500 காட்சிகள் 5 மைல்களுக்குள் நிகழ்ந்துள்ளன. இதில் சுமார் 150 சம்பவங்கள், பொருட்கள் நீரின் மேற்பரப்பிற்கு மேலே மிதப்பதையோ அல்லது நீரில் மூழ்குவதையோ விவரிப்பதாக மெரைன் டெக்னாலஜி நியூஸ் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா

கலிபோர்னியாவில் அதிக சம்பவங்கள்

நீண்ட கடற்கரைகளைக் கொண்ட கலிபோர்னியா (389 காட்சிகள்) மற்றும் புளோரிடா (306 காட்சிகள்) ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளன. அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகள் முழுவதும் இந்தப் புரியாத நிகழ்வுகளின் அடர்த்தியான தொகுப்புகளை எனிமா வெளியிட்ட வரைபடங்கள் காட்டுகின்றன. ஓய்வுபெற்ற அமெரிக்கக் கடற்படை ரியர் அட்மிரல் டிம் கல்லோடெட், கடலுடன் தொடர்புடைய நம்பகமான சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மிகப்பெரிய அபாய எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்துள்ளார். இது போன்ற நிகழ்வுகளைப் படிக்கும் சோல் பவுண்டேஷன் என்ற சிந்தனைக் குழுவிற்கான அறிக்கையில், விமானம் மற்றும் கடலுக்கு இடையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தடையின்றிப் பயணிக்கக்கூடிய தொழில்நுட்பம் உலகை மாற்றக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.