LOADING...
டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு: 6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்
6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்

டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு: 6 வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொண்ட உலக ஆளுமைகள்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2025
08:08 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையேயான முக்கியமான சந்திப்பு தென் கொரியாவின் பூசானில் இன்று (அக்டோபர் 30, 2025) நடைபெற்றது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இரு தலைவர்களும் நேரில் சந்திக்கும் முதல் நிகழ்வு இதுவாகும். ஏசியா பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் இச்சந்திப்பின் முதன்மை நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையே அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்களைக் குறைத்து, உறவுகளை ஒரு நிலையான பாதைக்குக் கொண்டு செல்வதுதான்.

முக்கிய அம்சங்கள்

சந்திப்பின் போது முக்கியத்துவம் பெறும் சாத்தியமான விவாதங்கள்

"நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிவோம், எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு உள்ளது. அவரை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்," என்று இரு ஜனாதிபதிகளும் கைகுலுக்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு, டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். வர்த்தக போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 'வரையறுக்கப்பட்ட உடன்பாட்டிற்கு' வர இரு தலைவர்களும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. டிரம்ப், சீனப் பொருட்கள் மீதான 100% கூடுதல் வரியை அமல்படுத்தும் அச்சுறுத்தலை தளர்த்தலாம் என்றும், இதற்கு ஈடாக, அரிய வகை உலோகங்கள் (Rare Earth Minerals) மீதான சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் செமிகண்டக்டர் சிப்கள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.