LOADING...
இந்திய ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு
இந்திய ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைந்துவிட்டதாக டிரம்ப் மீண்டும் பேச்சு

இந்திய ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2025
09:09 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை முழுமையாக நிறுத்துவதாகத் தனக்கு உறுதியளித்ததாக மீண்டும் கூறியுள்ளார். ஆனால், இதற்கு முன்பே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் டிரம்பின் முந்தைய கூற்றை வலுவாக மறுத்திருந்தது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் நடந்த இருதரப்பு மதிய உணவு விருந்தின்போது பேசிய டிரம்ப், இந்தியா ஏற்கனவே ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துவிட்டது என்றும், விரைவில் வாங்குவதை முற்றிலும் நிறுத்திவிடும் என்றும் கூறினார். இந்தியா, ரஷ்ய எண்ணெயை மொத்த இறக்குமதியில் 38% வரை வாங்கியது என்று கூறிய டிரம்ப், "அவர்கள் இனி அதைச் செய்ய மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே குறைத்துவிட்டார்கள், கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார்கள்." என்று வலியுறுத்தினார்.

நுகர்வோர்

இந்திய நுகர்வோர் நலன் பாதுகாப்பு

முன்னதாக, டிரம்ப்பின் கூற்றுகளை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், உலக எரிசக்திச் சந்தையில் நிலவும் நிலையற்ற சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதும், பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்வதும் அரசின் எரிசக்தி கொள்கையின் இரட்டைக் குறிக்கோள்கள் என்று மீண்டும் வலியுறுத்தியது. இந்த இலக்கை அடையவே, இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த முயல்வதாகவும் அமைச்சகம் தெரிவித்தது. எரிசக்தி ஆய்வு நிறுவனமான கெப்லர் வெளியிட்ட தரவுகள், டிரம்பின் கூற்றுக்கு முரணாக உள்ளன. இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்குப் பதிலாக, செப்டம்பர் மாதத்தில் இருந்த இறக்குமதிச் சரிவை மாற்றி, அக்டோபர் முதல் பாதியில் உண்மையில் அதிகரித்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.