வணிக புதுப்பிப்பு: செய்தி
ஒரு லட்சம் அமெரிக்கா டாலரை நெருங்கியது பிட்காயின் மதிப்பு; டிரம்ப் தேர்தல் வெற்றியால் கிடுகிடு உயர்வு
வரவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் கிரிப்டோகரன்சி சார்பு நிலைப்பாட்டின் நம்பிக்கையால், பிட்காயின் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) ஒரு புதிய சாதனை உச்சத்திற்கு உயர்ந்தது. $100,000 குறியை (சுமார் ₹84.4 லட்சம்) நெருங்கியது.
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனின் இவ்ளோதான் சம்பளமா?
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (சிஇஓ) சாம் ஆல்ட்மேனுக்கு 2023 இல் வருட ஊதியமாக $76,001 டாலர் மட்டுமே வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
போன்பே இயக்குனர் குழுவில் இருந்து பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் விலகல்
பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் போன்பே நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்
மொபைல் போன்கள் முதல் மடிக்கணினிகள் வரையிலான கேட்ஜெட்டுகளுக்கான பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா $5 பில்லியன் வரை ஊக்கத்தொகையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு மாதங்களில் 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியது ஜெப்ட்டோ
இந்திய விரைவு-வணிக ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜெப்ட்டோ தனது மூன்றாவது நிதிச் சுற்றில் வெறும் ஆறு மாதங்களில் $350 மில்லியன் திரட்டியுள்ளது.
சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) அதன் சென்னை தொழிற்சாலையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தது.
அமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டு எதிரொலி; 600 மில்லியன் டாலர் பத்திர விற்பனையை ரத்து செய்தது அதானி குழுமம்
நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட அதன் நிர்வாகிகள் மீதான லஞ்சப் புகாரைத் தொடர்ந்து அதானி குழுமம் 600 மில்லியன் டாலர் பத்திரத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.
மேக் இன் இந்தியாவால் நடந்த மாற்றம்; மின்னணு சாதன இறக்குமதி 2023-24 நிதியாண்டில் கணிசமாக குறைவு
மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் வளர்ந்து வரும் உள்ளூர்மயமாக்கல் காரணமாக 2023-2024 நிதியாண்டில் மின்னணு இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது.
BookMyShowவுக்கு போட்டியாக டிஸ்ட்ரிக்ட் செயலியை அறிமுகம் செய்தது ஜோமோட்டோ
டிஸ்ட்ரிக்ட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஜோமோட்டோ தனது நுகர்வோர் சலுகைகளை விரிவுபடுத்தியுள்ளது.
1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஜெனரல் மோட்டார்ஸ்
உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ், அதன் செலவுக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக சுமார் 1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடுமையாக அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடுமையாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் இடையே நாடு 140.60 மில்லியன் டன்கள் நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளது.
2025 இறுதியில் பிட்காயின் மதிப்பு ரூ.1.5 கோடியை எட்டும் என ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி கணிப்பு
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பிட்காயின் மற்றும் ஈத்ரியம் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பில் பெரிய முன்னேற்றத்தை கணித்துள்ளது.
இன்றைய (நவம்பர் 9) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால், நகை வாங்குபவர்களுக்கு சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல்
நவம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.6 பில்லியன் டாலர் குறைந்து 682.13 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட தரவு காட்டுகிறது.
உலகளவில் உணவுப் பொருட்களின் விலை 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்வு; ஐநா தகவல்
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) படி, அக்டோபர் மாதத்தில் உலகளாவிய உணவு விலைகள் உயர்ந்து, 18 மாதங்களில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
வெள்ளியன்று (நவம்பர் 8) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் எப்போதும் இல்லாத அளவிற்கு 84.37 ஆக சரிந்தது. இது முந்தைய நாளின் முடிவில் இருந்து 5 பைசா சரிவைக் குறிக்கிறது.
13 சதவீத ஊழியர்கள் ஆட்குறைப்பு; ஃப்ரெஷ்வொர்க்ஸ் சாப்ட்வேர் நிறுவனம் அறிவிப்பு
அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மென்பொருள் சேவை நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ், அதன் பணியாளர்களில் 13% குறைக்க உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியீட்டிற்கு தயாராகிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ
தொழிலதிபர் முகேஷ் அம்பானி 2025 ஆம் ஆண்டில் தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவிற்கான ஆரம்ப பொது வழங்கலை (ஐபிஓ) வெளியிடத் தயாராகி வருகிறார்.
வாடிக்கையாளர்களே உஷார்; நவம்பரில் 2 நாட்களுக்கு யுபிஐ சேவைகளை நிறுத்துகிறது எச்டிஎஃப்சி வங்கி
டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் பரவலான அதிகரிப்புக்கு மத்தியில், எச்டிஎஃப்சி வங்கி அத்தியாவசியமான சிஸ்டம் பராமரிப்பு காரணமாக நவம்பர் மாதத்தில் அதன் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகளை இரண்டு நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் அரசியல் ஸ்திரமின்மையால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி பலமடங்கு உயர்வு
உலகளாவிய ஜவுளி விநியோக மையமாக விளங்கும் அண்டை நாடான பங்களாதேஷின் அரசியல் கொந்தளிப்பால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்து வருகிறது.
9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த இந்தியாவின் உற்பத்தி செயல்பாடு; அக்டோபர் மாத பிஎம்ஐ குறியீட்டில் தகவல்
அக்டோபரில் இந்தியாவின் பர்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) குறியீடு 57.5 ஆக உயர்ந்துள்ளது.
கூகுள் இந்தியாவின் வரிக்குப் பிந்தைய லாபம் 26% அதிகரிப்பு
கூகுள் இந்தியா 2023-24 நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய லாபத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கட்டணங்களை செலுத்தாததால் பங்களாதேஷிற்கான மின்சார விநியோகத்தை குறைத்தது அதானி நிறுவனம்
அதானி பவர் நிறுவனம் பங்களாதேஷத்திற்கான தனது மின்சார விநியோகத்தை 50% குறைத்துள்ளது என தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது.
16.6 பில்லியன் டாலர் இழப்பு; 56 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ள இன்டெல் நிறுவனம்
உலகின் முன்னணி சிப்மேக்கர்களில் ஒன்றான இன்டெல், அதன் 56 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத காலாண்டுகளில் மிகப்பெரிய இழப்பை பதிவு செய்துள்ளது.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியுடன் பிசினஸ் பார்ட்னராக கைகோர்க்கும் நயன்தாரா
நடிகை நயன்தாராவின் 9ஸ்கின் என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15 வரை நீட்டிப்பு; மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25 க்கான கார்ப்பரேட் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15, 2024 வரை நீட்டித்துள்ளது.
12ஆம் வகுப்பில் தோல்வி; 19வது வயதில் சொந்த நிறுவனம்; ரூ.1,100 கோடிக்கு அதிபதியான அரோராவின் விடாமுயற்சி
டிஏசி செக்யூரிட்டியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான த்ரிஷ்னீத் அரோரா, 2024 ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் ரூ.1,100 கோடி நிகர மதிப்புடன் இடம் பிடித்துள்ளார்.
இனி வெளிநாடு வாழ் இந்தியர்களும் புக் செய்யலாம்; ஸ்விக்கியின் அசத்தல் அறிவிப்பு
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் தனது சேவைகளை அணுகுவதற்கு, சர்வதேச உள்நுழைவுகள் என்ற புதிய அம்சத்தை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.163 பில்லியன் டாலர் சரிந்து, மொத்தம் 688.267 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை கடைசி நேரத்தில் தவிர்த்த செபி தலைவர் மாதபி பூரி புச்
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் ஆஜராவதை திடீரென தவிர்த்துவிட்டதால், இன்று (அக்டோபர் 24) நடக்கவிருந்த முக்கியமான பொதுக் கணக்குக் குழு (பிஏசி) கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் பாட்டில்கள், சைக்கிள்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க திட்டம்; அமைச்சர்கள் குழு முன்மொழிவு
ஜிஎஸ்டி விகிதத்தை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் குழு 20 லிட்டர் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள், சைக்கிள்கள் மற்றும் உடற்பயிற்சி குறிப்பேடுகள் உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதங்களை முந்தைய 18%இல் இருந்து 5% ஆகக் குறைக்க முன்மொழிந்துள்ளது.
நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு
தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.746 பில்லியன் டாலர் குறைந்து 690.43 பில்லியன் டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) தெரிவித்தது.
உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்; லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் போன்ற நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிநபர் கணினிகளின் இறக்குமதியை 2025 ஜனவரி மாதத்திற்குப் பிறகு கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்; தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,700 டாலர்களைத் தாண்டியுள்ளது.
2,350 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நோக்கியா நிறுவனம்
தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியா, அதன் தற்போதைய செலவுக் குறைப்பு உத்தியின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் 2,350 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆறு முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய இந்தியர்களில் கௌதம் அதானி முதலிடம்; ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு
ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் அறிக்கை 2024இன் படி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த ஆண்டில் அதிக செல்வம் ஈட்டியவராக உருவெடுத்துள்ளார்.
இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்; மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய அரசாங்கத்தால் மஹாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.