போன்பே இயக்குனர் குழுவில் இருந்து பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் விலகல்
செய்தி முன்னோட்டம்
பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் போன்பே நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மூன்று காலாண்டுகளுக்கு முன்னர், பிளிப்கார்ட்டில் இதேபோன்ற நடவடிக்கையை அவர் மேற்கொண்ட பிறகு இந்த முடிவு வந்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் போன்பேவை பிளிப்கார்ட் கையகப்படுத்தியதில் பின்னி பன்சால் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின்னர் போன்பே நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் விலகல் முடிவை அறிவித்தாலும், விலகுவதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. மேலும், நிறுவனமும் அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.
பின்னி பன்சால் வெளியேறிய பிறகு, டீம்லீஸ் நிறுவனத்தில் நிர்வாகி மனிஷ் சபர்வாலை இயக்குனராக நியமிப்பதாக போன்பே அறிவித்துள்ளது.
சபர்வால் ஃபோன்பேயில் ஒரு சுயாதீன இயக்குநராகவும், தணிக்கைக் குழுவின் தலைவராகவும் இருப்பார்.
நிறுவனத்தின் வளர்ச்சி
பயணம் மற்றும் சந்தை மதிப்பீடு
வால்மார்ட் ஆதரவு பெற்ற போன்பே இந்தியாவின் சிறந்த மொபைல் பேமெண்ட் செயலியை இயக்குகிறது. நிறுவனம் 2022 இல் பிளிப்கார்ட்டில் இருந்து பிரிந்தது மற்றும் அதன் சந்தை மதிப்பை $12 பில்லியன் எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட $850 மில்லியன் திரட்டிய நிதி சுற்றுகள் மூலம் இந்த மதிப்பீடு நிறுவப்பட்டது.
குழுவில் இருந்து ராஜினாமா செய்த போதிலும், பன்சால் இன்னும் போன்பேவில் சுமார் 1% பங்குகளை வைத்திருக்கிறார்.
போன்பேவின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சமீர் நிகம் ஒரு அறிக்கையில் பன்சாலுக்கு நன்றி தெரிவித்தார்.
பன்சாலின் சுறுசுறுப்பான ஈடுபாடு, மூலோபாய வழிகாட்டுதல் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் ஆகியவை தங்களை கணிசமாக வளப்படுத்தியதாக சமீர் நிகம் தெரிவித்துள்ளார்.