
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியுடன் பிசினஸ் பார்ட்னராக கைகோர்க்கும் நயன்தாரா
செய்தி முன்னோட்டம்
நடிகை நயன்தாராவின் 9ஸ்கின் என்ற அழகு சாதனப் பொருட்கள் நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிறுவனம் ரூபாய் 999 முதல் 1899 வரை பல்வேறு ஸ்கின் கேர் தயாரிப்புகளை வழங்குகிறது. தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்ட நயன்தாரா, தற்போது இஷா அம்பானியுடன் கைகோர்த்துள்ளார்.
நயன்தாரா, "ஜவான்" என்ற இந்தி படத்தில் நடித்த பிறகு, இஷா அம்பானியுடன் நட்பு வளர்த்து வருகிறார். இந்நிலையில், இஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்லுடன் நயன்தாரா பங்குதாரராக மாறியுள்ளார். இஷா அம்பானியின் தலைமையிலான டிரா (Tira) என்ற ஆன்லைன் இணையத்தளத்துடன் இணைந்து, 9ஸ்கின் தயாரிப்புகள் இனி ரிலையன்ஸ் ரீடெய்லின் இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.
ட்விட்டர் அஞ்சல்
அம்பானி இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நயன்தாரா
Anant-Radhika Reception: South Actors In One Frame#Politikos #Politikosentertainment #IshaAmbani #MukeshAmbani #AnantRadhikaWedding #AnantWedsRadhika #AmbaniFamilyWedding #AmbaniFamily #Maheshbabu #surya #Nayanthara pic.twitter.com/KGS2KpXpwC
— politikosentertainment (@politikosET) July 17, 2024
விவரங்கள்
"டிரா மூலம் அதிகமான மக்களை எங்களின் பொருட்களை கவர்வதாக நம்புகிறோம்" : நயன்தாரா
கூடுதலாக, 9Skin நிறுவனம் "Skinderella" Hydrogel Mask என்ற புதிய பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது Tira என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே கிடைக்கப்பெறும்.
இந்தியாவைத் தாண்டி, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் Tira இணையதளம் மூலம் 9Skin பொருட்களை வாங்கலாம்.
நயன்தாரா டிராவுடன் இணைவது குறித்து கூறும்போது,"டிராவுடன் கூட்டு சேர்ந்து இந்திய சந்தையில் எங்கள் வரம்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து வகையான தோல் வகைகளுக்குமான சுத்தமான, பயனுள்ள மற்றும் நெறிமுறைகளோடு தோல் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதே எங்கள் நோக்கம். டிரா மூலம் அதிகமான மக்களை எங்களின் பொருட்களை கவர்வதாக நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.