NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை கடைசி நேரத்தில் தவிர்த்த செபி தலைவர் மாதபி பூரி புச் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை கடைசி நேரத்தில் தவிர்த்த செபி தலைவர் மாதபி பூரி புச் 
    பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை தவிர்த்த செபி தலைவர்

    பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் ஆஜராவதை கடைசி நேரத்தில் தவிர்த்த செபி தலைவர் மாதபி பூரி புச் 

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 24, 2024
    03:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் ஆஜராவதை திடீரென தவிர்த்துவிட்டதால், இன்று (அக்டோபர் 24) நடக்கவிருந்த முக்கியமான பொதுக் கணக்குக் குழு (பிஏசி) கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    பிஏசி தலைவர் கே சி வேணுகோபால், திட்டமிடப்பட்ட விவாதத்தில் மாதபி பூரி புச் கலந்து கொள்ள முடியாது என்று செபி தெரிவித்ததை அடுத்து ஒத்திவைப்பு முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

    வேணுகோபால்,மாதபி பூரி புச் ஆரம்பத்தில் இருந்தே பிஏசி முன் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியதாகவும், அதை தாங்கள் நிராகரித்திருந்தாகவும் கூறியுள்ளார்.

    இந்த ஆரம்ப தடைகள் இருந்தபோதிலும், பின்னர் அவர் ஆஜராக ஒத்துக்கொண்டதாகவும் வேணுகோபால் கோரினார்.

    சந்திப்பு நிகழ்ச்சி நிரல்

    பிஏசி கூட்டம் செபியின் செயல்திறனை மதிப்பாய்வு செய்ய இருந்தது

    பிஏசி கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல் செபியின் செயல்திறனை மதிப்பிடுவதாகும். குறிப்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் மாதபி பூரி புச் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு கூட்டப்பட்டது.

    இதற்கிடையே, மாதபி பூரி புச்சை அழைக்கும் பிஏசியின் முடிவு ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மூத்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, பிஏசியின் ஒரே வேலை அரசாங்கக் கணக்குகள் மற்றும் சிஏஜி அறிக்கைகளை ஆராய்வதில் மட்டுமே உள்ளது என்றும் செபியை விசாரிப்பது அல்ல என்றும் கூறினார்.

    கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, மற்றொரு பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், வேணுகோபால் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்ததாகக் குற்றம் சாட்டினார் மற்றும் அவரது நடத்தை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செபி
    நாடாளுமன்றம்
    இந்தியா
    வணிக செய்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    செபி

    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? இந்தியா
    'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு  அதானி
    செபியின் புதிய விதிமுறைகளால் பங்குசந்தை ப்ரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும்: ஜீரோதா CEO  பங்குச் சந்தை
    ஆகஸ்ட் 1 முதல் நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி விதிகள்

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என தகவல்  இந்தியா
    முழுக்கால பட்ஜெட்டுக்கும், இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கும் என்ன வித்தியாசம்? மக்களவை
    மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவா? மாலத்தீவு
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு 11 ராஜ்யசபா எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து பட்ஜெட்

    இந்தியா

    அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து அசாம்
    2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய் ஹூண்டாய்
    'பிஷ்னோய் கும்பலை நாடு கடத்த வேண்டும் என கனடாவிடம் கூறப்பட்டது; ஆனால்..':  கனடா
    மானேசர் தொழிற்சாலையில் ஒருகோடி கார்கள் உற்பத்தி செய்து மாருதி சுசுகி சாதனை மாருதி

    வணிக செய்தி

    பேட்டரி உற்பத்தித் துறையை மேம்படுத்த 2.44 பில்லியன் டாலர் மானியம் வழங்கும் ஜப்பான் ஜப்பான்
    கோல்டன் விசாவுக்கு ஆசைப்படும் இந்திய முதலீட்டாளர்கள்; இந்த நாட்டில் முதலீடு 37% அதிகரிப்பு இந்தியா
    நைக் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டொனாஹோ ஓய்வு பெறுகிறார்; அடுத்த CEO யார்? வணிகம்
    அமெரிக்காவின் பிரபல ஹோட்டல் நிறுவனத்தை $525 மில்லியனுக்கு விலைக்கு வாங்குகிறது ஓயோ ஹோட்டல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025