மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்
மொபைல் போன்கள் முதல் மடிக்கணினிகள் வரையிலான கேட்ஜெட்டுகளுக்கான பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா $5 பில்லியன் வரை ஊக்கத்தொகையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் தொழில்துறையை மேம்படுத்தவும், சீனாவில் இருந்து சப்ளைகளை நிறுத்தவும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் மொபைல் உற்பத்தியின் வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் மின்னணு உற்பத்தி கடந்த ஆறு ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து 2024 இல் 115 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை பயன்படுத்தி மொபைல் போன்களை தயாரித்து வருவதாக குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்
இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய திட்டத்தின் கீழ் இந்த சலுகைகள் வழங்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திட்டம் இன்னும் விவாதத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் தகுதிபெறும் உலகளாவிய அல்லது உள்ளூர் நிறுவனங்களுக்கு மொத்தம் $4 முதல் $5 பில்லியன் வரையிலான ஊக்கத்தொகைகளை வழங்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் மின்னணு அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட திட்டம், ஊக்கத்தொகைக்கு தகுதியான கூறுகளை அடையாளம் கண்டு அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. முன்னதாக, 2024 நிதியாண்டில் 89.8 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ், டெலிகாம்ஸ் கியர் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து பெறப்பட்டவை என்று ஜிடிஆர்ஐயின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.