மீண்டும் மீண்டுமா! வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று (அக்டோபர் 21) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ₹7,300 ஆகவும், ஒரு சவரன் ₹58,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது இன்று ஒரு சவரன் ₹160 உயர்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 12 அன்று ₹56,960 ஆக இருந்த தங்கத்தின் விலை, பத்து நாட்களில் ₹1,440 அதிகரித்து, இன்று ₹58,400ஐ எட்டியது. தூய தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் விலை ₹7,755 ஆகவும், ஒரு சவரன் ₹62,040 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையும் உயர்வு
வெள்ளி விலையும் இன்று கணிசமான உயர்வை பெற்றுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹109 ஆகவும், ஒரு கிலோ ₹1,09,000 ஆகவும் இன்று உள்ளது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது ஒரு கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை அக்டோபர் 12 அன்று ₹1,03,000 ஆக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களில் ₹6,000 அதிகரித்து இன்று ₹1,09,000 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்க நினைத்தவர்களுக்கு இந்த தொடர் விலை உயர்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.