NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஜெனரல் மோட்டார்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஜெனரல் மோட்டார்ஸ்
    1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஜெனரல் மோட்டார்ஸ்

    1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது ஜெனரல் மோட்டார்ஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 16, 2024
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜெனரல் மோட்டார்ஸ், அதன் செலவுக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக சுமார் 1,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.

    பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நேற்று பணிநீக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு மாறிவரும் சந்தை நிலைமைகளின் வெளிச்சத்தில் வருகிறது.

    மேலும் இந்த ஆண்டு நிலையான செலவுகளை $2 பில்லியன் குறைக்க ஜெனரல் மோட்டார்ஸின் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.

    பணிநீக்கங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சில ஊழியர்கள் குறைவான செயல்திறன் காரணமாக விடுவிக்கப்பட்டாலும், மற்றவர்கள் முன்னுரிமைகளை மறுசீரமைப்பதற்கான ஒரு மூலோபாய மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இருந்தனர்.

    நிறுவனத்தின் அறிக்கை

    பணிநீக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களுக்கான பதில்

    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பணிநீக்கங்களை உறுதி செய்தாலும், அவர்கள் சரியான எண்ணிக்கையை வெளியிடவில்லை.

    "இந்தப் போட்டிச் சந்தையில் வெற்றி பெறுவதற்கு, வேகம் மற்றும் சிறப்பை மேம்படுத்த வேண்டும்" என்று ஜெனரல் மோட்டார்ஸ் பிரதிநிதி கெவின் கெல்லி கூறினார்.

    கடந்த ஆண்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ஆனது, அமெரிக்காவில் 53,000 பேர் உட்பட, உலகளவில் சுமார் 76,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    எனினும், அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர் எலான் மஸ்க் ஆகியோர் மின்சார வாகனங்களுக்கு வழங்கும் கூட்டாட்சி மானியங்களை ரத்து செய்வார்கள் எனும் அச்சத்தின் மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெனரல் மோட்டார்ஸ்
    அமெரிக்கா
    ஆட்குறைப்பு
    வணிக புதுப்பிப்பு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஜெனரல் மோட்டார்ஸ்

    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: 1,000 மென்பொருள் பொறியாளர்களை நீக்கியதாக தகவல் பணி நீக்கம்
    பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4.5 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்கா
    ஜெனரல் மோட்டார்ஸ் உருவாக்கும் புதிய Auto pilot, ஹேண்ட்ஸ் ஃப்ரீ டிரைவிங் சிஸ்டம் கார்

    அமெரிக்கா

    அமெரிக்க தேர்தல் இணையதளங்களை குறிவைத்து ஈரானிய ஹேக்கர்கள் தாக்குதல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை ஹேக்கிங்
    அமெரிக்காவில் மெக்டொனால்டு உணவாகத்தால் பரவிய E Coli: காரணம் கண்டுபிடிப்பு உடல் ஆரோக்கியம்
    எலக்ட்ரிக் கார் செயல்திறனை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தில் 29.5 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் ஸ்டெல்லாண்டிஸ் மின்சார வாகனம்
    ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா? இந்தியர்கள்

    ஆட்குறைப்பு

    உலகளவில் இரண்டு மாதங்களில் 1.2 லட்சம் பேர் பணிநீக்கம் - பின்னணி என்ன? கூகுள்
    கூகுளின் சிறந்த விருதை பெற்றும் ஊழியர் பணிநீக்கம்! கண்ணீர் விட்ட ஊழியர் கூகுள்
    திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    மெட்டா நிறுவனத்தின் அடுத்த கட்ட பணிநீக்கம்! ஊழியர்கள் அதிர்ச்சி மெட்டா

    வணிக புதுப்பிப்பு

    புதிய உச்சம் தொட்ட இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு; முதல்முறையாக 700 பில்லியன் டாலர்களை கடந்து சாதனை இந்தியா
    சமையல் எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன்; கார்பன் உமிழ்வைக் குறைக்க அதானி நிறுவனம் அதிரடி திட்டம் அதானி
    இந்தியாவின் பசுமை மின்துறையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா
    மாலத்தீவுடன் கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம்; இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை ரிசர்வ் வங்கி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025