இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
24 Dec 2024
ராமேஸ்வரம்ராமேஸ்வரத்தில் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள்; DSP தலைமையில் விசாரணை
ராமேஸ்வரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றும் அறையில் உடை மாற்றுவதற்காக செல்லும் போது, அந்த அறையில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பெண் பக்தர் ஒருவர் கண்டுபிடித்தார்.
24 Dec 2024
உயர்நீதிமன்றம்பலாத்காரம், ஆசிட் வீச்சில் உயிர் பிழைத்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை, போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாயன்று ஒரு முக்கிய உத்தரவில் தெரிவித்துள்ளது.
24 Dec 2024
ஜல்லிக்கட்டு2025 பொங்கல் வந்தாச்சு: ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என பல அமைப்புகள் போர்க்கொடி தூக்க, தமிழகத்தில் போராட்டம் வெடித்தது நினைவிருக்கலாம்.
24 Dec 2024
மெட்ரோகோவை மற்றும் மதுரையில் மெட்ரோவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரியில் துவங்கும்
கோவையில் ரூ.10,740 கோடி மற்றும் மதுரையில் ரூ.11,340 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
24 Dec 2024
அல்லு அர்ஜுன்புஷ்பா 2 திரையரங்க விவகாரம்: 4 மணி நேரத்திற்கும் மேலாக அல்லு அர்ஜுனிடம் நீடித்த விசாரணை
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது புஷ்பா: தி ரைஸ் - பாகம் 2 படத்தின் ஸ்பெஷல் திரையிடலின் போது ஏற்பட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தது தொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்பல்லி காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
24 Dec 2024
கொல்கத்தாRG கர் பலாத்கார வழக்கு: குற்றம் நடந்த இடத்தில் போராடியதற்கான ஆதாரம் இல்லை என்று தடயவியல் அறிக்கை
மத்திய தடய அறிவியல் ஆய்வகம் (CFSL) சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையின்படி, கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில், போராட்டம் நடைபெற்றதற்கான அல்லது எதிர்ப்புக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
24 Dec 2024
பள்ளிக்கல்வித்துறைமாணவர்களுக்கு நற்செய்தி அறிவித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை All Pass
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'ஆல் பாஸ் கொள்கை' இனி இல்லை என நேற்று அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் முடிவு அரசுப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
24 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
23 Dec 2024
சைபர் கிரைம்தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி; ₹11.8 கோடி இழந்த பெங்களூர் மென்பொறியாளர்
நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 12, 2024க்கு இடையில் நடந்த டிஜிட்டல் கைது மோசடியில் 39 வயதான பெங்களூர் மென்பொருள் பொறியாளர் ₹11.8 கோடி மோசடி செய்யப்பட்டார்.
23 Dec 2024
எஸ்.ஜெய்சங்கர்டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் பயணம்; அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல் உயர்மட்ட பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பர் 24 முதல் 29 வரை அமெரிக்கா செல்கிறார்.
23 Dec 2024
மெட்ரோடிரைவர் இல்லா மெட்ரோ ரயில் 2026-இல் சோதனைக்கு வருகிறது; ரூ.3,657 கோடி மதிப்பில் CMRL ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில், டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 70 மெட்ரோ ரயில்களை தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024
கல்விஇனி 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது; புதிய நடைமுறையை வெளியிட்டது மத்திய அரசு
8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான ஆல் பாஸ் எனும் தோல்வியில்லாக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. திருத்தப்பட்ட கொள்கையின்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி தேர்வுகள் நடத்தப்படும்.
23 Dec 2024
கனமழைதமிழகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Dec 2024
குடியரசு தினம்குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, வதந்திகளை நம்பக்கூடாது என விளக்கம் அளித்துள்ளது.
23 Dec 2024
குளிர்காலம்வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; காஷ்மீர் மாநிலத்தில் குளிர் அலையால் உறைந்த நீர் ஆதாரங்கள்
கடுமையான குளிர் அலை வட இந்தியாவை தாக்குகிறது.
23 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
23 Dec 2024
அல்லு அர்ஜுன்அல்லு அர்ஜுன் vs ஹைதராபாத் போலீஸ்: தியேட்டர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் இதுவரை நடந்தவை
டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வெளியே 'புஷ்பா 2' பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
22 Dec 2024
சென்னைஊழியர்களுக்கு டாடா கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கும் சென்னை நிறுவனம்
சென்னையைச் சேர்ந்த சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில், டாடா கார்கள், ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை 20 குழு உறுப்பினர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது.
22 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (டிசம்பர் 23) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
21 Dec 2024
சென்னைஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம்
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்த 26 வயது வாலிபர், தனது தாயின் புற்றுநோய் சிகிச்சை சேமிப்பை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
21 Dec 2024
இந்தியாஇந்தியாவின் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக அதிகரிப்பு; IFSR அறிக்கையில் தகவல்
இந்தியாவின் மொத்த காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 1,445 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. இப்போது நாட்டின் புவியியல் பகுதியில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17% ஆக உள்ளது.
21 Dec 2024
தமிழக அரசுதிருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்கள்; கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
கன்னியாகுமரியில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25வது ஆண்டு விழாவை, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பிரமாண்டமான வெள்ளி விழா நிகழ்ச்சியுடன் தமிழக அரசு கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளது.
21 Dec 2024
தமிழக அரசுஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்
மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
21 Dec 2024
வானிலை அறிக்கைடிசம்பர் 25 வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
20 Dec 2024
இந்திய ராணுவம்எல்&டி நிறுவனத்தினிடம் இருந்து ₹7,628 கோடிக்கு கே9 வஜ்ரா பீரங்கி வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன்களை வலுப்படுத்த, கே9 வஜ்ரா-டி பீரங்கிகளை வாங்குவதற்கு, லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) லிமிடெட் நிறுவனத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் ₹7,628 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
20 Dec 2024
நாடாளுமன்றம்நாடாளுமன்ற அமளிக்காக ராகுல் காந்தியை கைது செய்ய முடியுமா?
நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதையடுத்து, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.
20 Dec 2024
ஆந்திராஆந்திர பெண்ணுக்கு பார்சலில் மனித சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டல்!
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், ஏன்டாகண்டி கிராமத்தைச் சேர்ந்த சாகி துளசி என்ற பெண், தனது வீட்டிற்கு மின்சாதன பொருட்கள் வரும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், பார்சலில் மனித எச்சங்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 Dec 2024
அயோத்திஉ.பி.யின் முக்கிய சுற்றுலாத் தலமாக தாஜ்மஹாலை முந்திய அயோத்தி!
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 476.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
20 Dec 2024
சுற்றுலாத்துறைதமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்
தமிழ்நாட்டில் சென்றாண்டில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக, தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.
20 Dec 2024
தமிழக அரசு"6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்": சபாநாயகர் அப்பாவு
வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
20 Dec 2024
ஹரியானாஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளத்தின் (ஐஎன்எல்டி) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, குருகிராமில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலமானார்.
20 Dec 2024
ஜெய்ப்பூர்எரிபொருள் டேங்கர் மீது ரசாயன லாரி மோதியதில் கடும் தீ விபத்து; 8 பேர் பலி, 40 வாகனங்கள் எரிந்து நாசம்
ஜெய்ப்பூரில் இன்று காலை ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் ரசாயனம் ஏற்றி வந்த எல்பிஜி டேங்கர் மற்றும் ரசாயனம் ஏற்றி ஏற்றி வந்த லாரி மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
20 Dec 2024
கோவைமனைவிக்கு ஜீவனாம்சமாக 20 மூட்டைகளில் ₹80,000 மதிப்பிலான நாணயங்கள்; நீதிமன்றத்தை திகைக்கவைத்த கணவர்
கோவையில் நபர் ஒருவர் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ₹80,000ஐ நாணயங்களாக மூட்டைகளில் கொடுத்தது நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
20 Dec 2024
ஒரே நாடு ஒரே தேர்தல்ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை
2034ஆம் ஆண்டுக்குள் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்களை லோக்சபா 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு (ஜேபிசி) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024
நாடாளுமன்றம்எதிர்க்கட்சிகளின் கடும் அமளியை தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு; இதுவரை நடந்தவை
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நான்கு வாரங்கள் கடும் இடையூறுகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு இன்று முடிவடைகிறது.
20 Dec 2024
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிசம்பர் 21) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
20 Dec 2024
இந்திய ராணுவம்முன்னாள் ராணுவ ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறு காரணம்: அறிக்கை
இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கடந்த டிசம்பர் 8, 2021 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.
20 Dec 2024
ராகுல் காந்திபாஜக எம்.பி.க்களை கடுமையாக காயப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு
பாஜக எம்பி ஹேமங் ஜோஷி அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை நேற்று எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
20 Dec 2024
பேருந்துகள்தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அடுத்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை துவங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2024
விபத்துமேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்தில் இருவர் பலி; மீட்பு பணி தீவிரம்
மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் இன்று மாலை திடீரென விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.