2025 பொங்கல் வந்தாச்சு: ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என பல அமைப்புகள் போர்க்கொடி தூக்க, தமிழகத்தில் போராட்டம் வெடித்தது நினைவிருக்கலாம். பலகட்ட போராட்டங்கள், சட்ட வழக்குகளுக்கு பின்னர் உரிய வழிகாட்டு நெறிமுறையுடன் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போதிருந்து ஆண்டுதொடரும், அரசு சார்பில் நெறிமுறைகள் வெளியிட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு சீசன் தொடங்கவுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த போட்டிக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:
விண்ணப்பித்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெற முடியும்
காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் கொடுமையைத் தவிர்த்து, அவைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படக்கூடாது. போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக்கூடாது. ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடத்தில், போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர, வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படாது.