
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்தில் இருவர் பலி; மீட்பு பணி தீவிரம்
செய்தி முன்னோட்டம்
மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் இன்று மாலை திடீரென விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
மேலும், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆறாவது யூனிட் பகுதியில், சாம்பல் செல்லும் குழாய் மற்றும் மேலடுக்கில் உள்ள நிலக்கரி சேமிப்பு தொட்டி சாய்ந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கிய வெங்கடேஷ் மற்றும் பழனிசாமி என்ற இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இன்னும் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மீட்பு பணியில் JCB இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாததுதான் விபத்து ஏற்பட்டது என ஒப்பந்த ஊழியர்கள் கூறினார்.
இந்த விபத்து காரணமாக, மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அனல் மின் நிலைய நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விபத்து - 5 ஊழியர்கள் காயம் #Salem #Mettur #Accident #Workers #Injury #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/r7bnRZtnLQ
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) December 19, 2024