
தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் சென்றாண்டில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக, தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 43,283 பழமையான கோவில்கள், 1,076 கி.மீ நீளமான கடற்கரை, 18 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 5 புலிகள் காப்பகங்கள் மற்றும் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 6 தலங்கள் உண்டு. இவை அனைத்தும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தமிழகத்தின் சிறப்பான சுற்றுலாத்தளங்களாக விளங்குகின்றன" என்றார்.
கொள்கை
சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகள்
ஆளும் தமிழக அரசின் கொள்கையின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில உள்நாட்டு உற்பத்தியில், சுற்றுலாவின் பங்களிப்பை 12% ஆக உயர்த்தவும் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் 25 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்கையின் மூலம், சுற்றுலா துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், நிகழ்ச்சிகள், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் கலைத் திருவிழாக்களை நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், 2020ஆம் ஆண்டில் 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை தற்போது உயர்ந்து 2023 இல் 28.71 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் (உள்நாட்டு மற்றும் வெளிநாடு) வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை படைத்திருக்கிறது திராவிட மாடல் அரசு!
— TN DIPR (@TNDIPRNEWS) December 20, 2024
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ராஜேந்திரன் அவர்களின் அறிக்கை.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR @CMOTamilnadu @mkstalin pic.twitter.com/rAJuVP6SSe