எரிபொருள் டேங்கர் மீது ரசாயன லாரி மோதியதில் கடும் தீ விபத்து; 8 பேர் பலி, 40 வாகனங்கள் எரிந்து நாசம்
ஜெய்ப்பூரில் இன்று காலை ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் ரசாயனம் ஏற்றி வந்த எல்பிஜி டேங்கர் மற்றும் ரசாயனம் ஏற்றி ஏற்றி வந்த லாரி மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குறைந்தது 8 பேர் தீயில் கருகினர் மற்றும் 41 பேர் படுகாயமடைந்தனர். ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் எல்பிஜி ஏற்றிச்சென்ற டிரக் மீது ரசாயனம் ஏற்றப்பட்ட டிரக் மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் பரவி, அங்கே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களை எரித்தது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 40 வாகனங்களுக்கு தீ பரவியது.
Twitter Post
Twitter Post
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், நெடுஞ்சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது இந்த பயங்கர விபத்துக்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. "எல்பிஜி கொள்கலனில் ஏற்பட்ட வெடிப்பு மிகப்பெரியது. பெட்ரோல் பம்ப் தீப்பிடித்ததா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் கூறினார். ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா நிலைமையை மதிப்பிட்டு, விபத்தில் காயமடைந்தவர்களைச் சந்திக்க எஸ்எம்எஸ் மருத்துவமனைக்குச் சென்றார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடியும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். அதோடு, "ராஜஸ்தானின் ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிர் இழந்தது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது. உதவித் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்" எனவும் அறிவித்துள்ளார்.