NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம்
    சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

    ஆன்லைன் சூதாட்டத்தின் தாயின் கேன்சர் செலவு பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை; சென்னையில் நடந்த துயர சம்பவம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 21, 2024
    04:59 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்த 26 வயது வாலிபர், தனது தாயின் புற்றுநோய் சிகிச்சை சேமிப்பை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

    ஆகாஷ் என அடையாளம் காணப்பட்ட இறந்தவர், சனிக்கிழமை காலை தனது வீட்டின் மொட்டை மாடியில் இறந்து கிடந்தார்.

    எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்ததால், தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்த ஆகாஷ், கேட்டரிங் படிப்பை முடித்து விட்டு, உணவு வியாபாரம் செய்து வந்தார்.

    அவர் கொரோனா தொற்றுநோய்களின் போது ஆன்லைன் கேம்களுக்கு, குறிப்பாக ரம்மிக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிகிறது.

    அவரது தாயாரின் புற்றுநோய் சிகிச்சைக்காக சேமித்த ₹30,000 பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்து திட்டிய பிறகு, அவர் காணாமல் போயுள்ளார்.

    தேடல் முயற்சிகள்

    ஆகாஷை தேடும் குடும்பத்தின் வீண் தேடல்

    அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, ஆகாஷ் காணாமல் போனார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் குடும்பத்தினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில், அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அவரது சடலத்தைக் கண்டனர்.

    அங்கு அவர் அங்குள்ள அறை ஒன்றில் டிவி கேபிள் வயரால் கழுத்தை நெரித்துக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

    கோட்டூர்புரம் போலீசார் ஆகாஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹெல்ப்லைன்

    உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தால் உதவியை நாடுங்கள்

    நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், தற்கொலை தடுப்பு ஆலோசனைக்காக AASRA-ஐ அணுகலாம்.

    அதன் எண் 022-27546669 (24 மணிநேரம்). நீங்கள் ரோஷ்னி என்ஜிஓவை +914066202000 என்ற எண்ணில் டயல் செய்யலாம் அல்லது +91-83222-52525 என்ற எண்ணில் COOJ ஐ டயல் செய்யலாம்.

    24x7 வேலை செய்யும் சினேகா இந்தியா அறக்கட்டளையை +91-44246-40050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    அதேபோல் வந்த்ரேவாலா அறக்கட்டளையின் ஹெல்ப்லைன் எண் +91-99996-66555 (அழைப்பு மற்றும் வாட்ஸ்அப்) அழைக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ஆன்லைன் விளையாட்டு
    ஆன்லைன் கேமிங்
    தற்கொலை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    சென்னை

    மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50% உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் மாநில அரசு
    சென்னையில் இடம் மாறும் பேருந்து நிறுத்தங்கள்; டிராபிக் ஜாம்-ஐ தவிர்க்க புது ஐடியா பேருந்துகள்
    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?  வானிலை அறிக்கை
    எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம் விருது

    ஆன்லைன் விளையாட்டு

    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை தமிழ்நாடு
    ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு  இந்தியா
    ஆன்லைன் விளையாட்டுக்களில் வெல்லும் பரிசுத்தொகைக்கு வரிப்பிடித்தம்.. CBDT-யின் புதிய அறிவிப்பு என்ன? பொழுதுபோக்கு
    வரி ஏய்ப்பு செய்யும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் சேவைகளை முடக்க நடவடிக்கை? ஜிஎஸ்டி

    ஆன்லைன் கேமிங்

    ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்? ஜிஎஸ்டி
    ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை ஜிஎஸ்டி
    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிராண்டு தூதுவராக அறிவித்திருக்கும் BGMI கேம்ஸ்
    ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வருமான வரி விதிகள்

    தற்கொலை

    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம் நீட் தேர்வு
    நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை  சென்னை
    சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு  சின்னத்திரை
    ஒரே நாளில் 2 நீட் மாணவர்கள் தற்கொலை: ராஜஸ்தானின் கோட்டாவில் என்ன நடக்கிறது? ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025