ராமேஸ்வரத்தில் பெண் பக்தர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராக்கள்; DSP தலைமையில் விசாரணை
ராமேஸ்வரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் குளித்துவிட்டு, உடை மாற்றும் அறையில் உடை மாற்றுவதற்காக செல்லும் போது, அந்த அறையில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பெண் பக்தர் ஒருவர் கண்டுபிடித்தார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், DSP தலைமையில் ஒரு குழு விசாரணையை துவக்கியுள்ளது.
Twitter Post
தனியார் குளியல் மற்றும் உடைமாற்றும் அறையில் சிக்கிய கேமரா
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், ராமேஸ்வரம் வந்தபோது, அக்னி தீர்த்த கடற்கரையில் குளித்து, அப்பகுதியில் உள்ள தனியார் குளியல் மற்றும் உடை மாற்றும் அறைக்கு சென்றனர். அப்போது, அந்த அறையில் கேமரா இருப்பதை பார்த்த பெண், அதனை கைப்பற்றி தந்தையிடம் கூறினாள். அதன் பிறகு, காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திலுள்ள கடையை சோதனை செய்தபோது, மூன்று ரகசிய கேமராக்களை கண்டுபிடித்து கைப்பற்றினர். விசாரணையில், இந்த கேமராக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் கடையின் உரிமையாளர் ராஜேஷ் வாங்கியதாக தெரிந்தது. இதையடுத்து, ராஜேஷ் மற்றும் டீ மாஸ்டர் இருவரையும் காவல்துறை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.