
"6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்": சபாநாயகர் அப்பாவு
செய்தி முன்னோட்டம்
வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர், "அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்த உள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வு குழுவின் முடிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் குறித்து முதல்வர் முடிவு செய்யப் போகின்றார். அதனை விவாதித்து நிறைவேற்ற சட்டசபை தயார்." என்றார்.
கடந்த கூட்டத்தில் கவர்னர், அரசின் உரையில் முரண்பாடு இருந்தது என கூறியது குறித்து பேசிய அவர்,"இந்த முறை கவர்னர் உரையை முழுமையாக படிப்பார் என்று நம்புகிறேன்," எனவும் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | "கடந்த முறை முதல் மற்றும் கடைசி பக்கத்தை மட்டும் படித்தார்.. இந்த முறையாவது முழுமையாக படிப்பார் என நம்புகிறேன்”
— Sun News (@sunnewstamil) December 20, 2024
ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது சட்டமன்றம்.. சபாநாயகர் அப்பாவு பேட்டி#SunNews | #TNAssembly | #RNRavi | @AppavuSpeaker pic.twitter.com/XZ5i1VRbtb
பதில்
கூட்டத்தொடர் 100 நாட்கள் நடைபெறும் என்ற திமுகவின் வாக்குறுதிக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம்
சட்டசபை கூட்டத்தொடர் 100 நாட்கள் நடக்கும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியின் கேள்விக்கு பதில் அளிக்கையில், "கடந்த 2011-2021 ஆண்டுகளில் குளிர்காலக் கூட்டத்தொடர்கள் 2 நாட்கள் மட்டுமே நடந்தது. இது நிதியமைச்சரின் தீர்மானத்தினால் ஏற்பட்டது," என்று சபாநாயகர் கூறினார்.
அவர் மேலும், "விவாதம் இல்லாமல் நடைபெற்று வந்த குளிர்காலக் கூட்டத்தொடரை, எவ்வளவு தாமதமானாலும், விவாதத்துடன் நடத்த முதல்வர் நடவடிக்கை எடுத்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது, மழை மற்றும் வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால், குறுகிய நாட்களில் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் 100 நாட்கள் கூட்டம் நடக்கும். 10 நாட்கள் குறைவாக நடந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளில் எந்த குறையும் ஏற்படவில்லை." என்று கூறினார்