கோவை மற்றும் மதுரையில் மெட்ரோவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரியில் துவங்கும்
கோவையில் ரூ.10,740 கோடி மற்றும் மதுரையில் ரூ.11,340 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் பிப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் என்று CMRL மேலாண்மை இயக்குனர் சித்திக் இன்று தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களுடன் பேட்டியளித்த சித்திக்,"கோவை மாநகராட்சியில் 32 ஸ்டேஷன்களுடன், 2 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு மத்திய அரசிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசு சில கூடுதல் விவரங்களை கேட்டுள்ளது, அவற்றும் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்." எனத்தெரிவித்தார்.
Twitter Post
மதுரை மெட்ரோவின் அப்டேட்
மெட்ரோ பாதையில், 30 மீட்டர் இடைவெளியில் ஒரு தூண் கட்டப்படும். மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைகிறது. மதுரையில், 32 கிலோமீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ கட்டமைப்பு 10 -15 ஆண்டுகளுக்காக வடிவைப்பது அல்ல. அது 150 ஆண்டுகளுக்கான கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கோவை மெட்ரோவின் விவரங்கள்
மேலும், "இந்த மெட்ரோ திட்டம் 700 பயணிகளை ஏற்றி செல்ல 3 பெட்டிகள் இயக்க திட்டம். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தொடங்கும். 16 ஏக்கர் நிலம் பணிமனை அமைப்பதற்கும், 10 ஹெக்டேர் நிலம் வழித்தடம் அமைப்பதற்கும் தேவைப்படும். பணிமனை, சக்தி பொறியியல் கல்லூரி அருகே அமைக்கப்படும், மேலும் ஒரு சிறிய பணிமனை வழியம்பாளையம் பிரிவில் அமைக்கப்படும்." என்றார். இந்த திட்டம் 3 ஆண்டுகளில் முழுமையாக செயல்படுத்தப்படும். கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ திட்டம் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும். நிலம் பெற்றுக்கொள்ளும் பணி பிப்ரவரியில் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.