NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் பயணம்; அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் பயணம்; அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
    அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

    டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் பயணம்; அமெரிக்கா செல்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 23, 2024
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதல் உயர்மட்ட பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பர் 24 முதல் 29 வரை அமெரிக்கா செல்கிறார்.

    இந்த பயணம் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதையும், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    ஆழ்ந்த ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்கும் உலகளாவிய சவால்களைச் சமாளிப்பதற்கும் ஜெய்சங்கர் அமெரிக்க தரப்புடன் உரையாடுவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

    இந்த பயணத்தின்போது, ​​வாஷிங்டனில் நடைபெறும் இந்திய தூதர்களின் மாநாட்டிற்கும் அவர் தலைமை தாங்குவார்.

    அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்திய வரலாற்றில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க சார்பானவர் என்றதோடு, வலுவான இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை பாராட்டிய சிறிது நேரத்திலேயே இந்த பயணம் வந்துள்ளது.

    உண்மையான நண்பர்

    இந்தியாவை உண்மையான நண்பர் எனக் குறிப்பிட்ட டொனால்ட் டிரம்ப்

    ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ஜனவரியில் பதவியேற்கவுள்ளார். மேலும் இந்தியாவை உண்மையான நண்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இருப்பினும், இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி சம்பந்தப்பட்ட பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும் இந்த பயணம் அமைவது குறிப்பிடத்தக்கது.

    பல பில்லியன் டாலர் லஞ்சம் மற்றும் மோசடி வழக்கில் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அஸூர் பவர் குளோபல் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாகிகள் மீது அமெரிக்க அதிகாரிகள் சமீபத்தில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களுக்கான நிதியைப் பெறுவதற்காக உலகளாவிய முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்துவதாக குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.

    அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதோடு, இவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா

    இந்தியா

    நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 4.85% வீழ்ச்சி; இறக்குமதி 27% அதிகரிப்பு வர்த்தகம்
    இலங்கைக்கு இயற்கை எரிவாயு வழங்க இந்தியா ஒப்புதல்; பிரதமர் மோடி அறிவிப்பு இலங்கை
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை அறிமுகம்; சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்கிறார் ஒரே நாடு ஒரே தேர்தல்
    டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருது வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு உச்ச நீதிமன்றம்

    அமெரிக்கா

    மனிதர்கள் மூலம் ரோபோடாக்சியை கட்டுப்படுத்த டெஸ்லா நிறுவனம் முடிவு டெஸ்லா
    இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்! இஸ்ரேல்
    அமெரிக்காவில் எஃப்.பி.ஐ இயக்குநராக இந்திய வம்சாவளி காஷ் படேலுக்கு பொறுப்பு; டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு டொனால்ட் டிரம்ப்
    பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% வரி; அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025