Loading...

டொனால்ட் டிரம்ப்: செய்தி

23 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையா? ஐ.நா சபை கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில்(UNGA) இரு நாடுகளின் உயர் அதிகாரிகளிடையே 3 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

22 Sep 2026
• ஈரான்

ஈரான் விமானங்களுக்கு சர்வதேச தடை: அமெரிக்காவின் கெடுவால் உலகம் முழுவதும் இயக்கம் முடங்கும் அபாயம்

ஈரானின் அனைத்து விமான நிறுவனங்களின் சேவைகளையும் உலகம் முழுவதும் புதன்கிழமை (செப்டம்பர் 23) முதல் முழுமையாக முடக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஊடகப் புறக்கணிப்பால் அமெரிக்காவில் அதிர்ச்சி; மைக் இல்லாமல் பேசிய டொனால்ட் டிரம்ப்

CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முதன்மை தொலைக்காட்சி அமைப்புகள் டிரம்பின் நிகழ்வுகளை புறக்கணித்துள்ளன.

21 Sep 2026
• அமெரிக்கா

'அமெரிக்கா மீது தாக்குதல் இல்லை, ஆனால்...': டிரம்பிற்கு ஹவுதி கொடுத்த வாக்குறுதி

செங்கடல் பகுதியில் பயணம் செய்யும் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம் உறுதியளித்துள்ளனர்.

21 Sep 2026
• ஈரான்

'ஒட்டுமொத்த நாட்டையும் அழித்துவிடுவேன்...': டிரம்பின் பகிரங்க எச்சரிக்கையும், ஈரானின் 7 நிபந்தனைகளும்

ஈரானுடனான மோதல் போக்கில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், விரைவில் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

20 Sep 2026
• அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் ஜி ஜின்பிங்கிற்கு விருந்தளிக்க திட்டம்! அமெரிக்காவின் அணுகுமுறையில் திடீர் மாற்றம் ஏன்?

அமெரிக்காவின் பொருளாதார சரிவுக்கு சீனாதான் முழு முதல் காரணம் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது தனது அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டி வருகிறார்.

20 Sep 2026
• அமெரிக்கா

7 கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் அல்லது போருக்குத் தயாராகவும்! கட்டார் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் அனுப்பிய தூது

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கத்தார் நாட்டின் தூதர்கள் வழியாக ஈரான் 7 முக்கிய நிபந்தனைகளை அனுப்பியுள்ளது.

வெள்ளை மாளிகைக்குள் நுழைய சிஎன்என், எம்எஸ் நௌ, பாலிடிகோ ஊடகங்களுக்கு டிரம்ப் தடை; காரணம் இதுதான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிஎன்என், எம்எஸ் நௌ, மற்றும் பாலிடிகோ ஆகிய பிரபல செய்தி ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கிரீன்லாந்தை ராணுவ ரீதியாகக் கைப்பற்றத் தேவையில்லை! டென்மார்க்குடன் ஒப்பந்தம் செய்தது அமெரிக்கா; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவின் பாதுகாப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

19 Sep 2026
• ரஷ்யா

இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க டிரம்பிற்கு அதிகாரம்! ரஷ்யா - ஈரான் தடைகள் சட்டத்திற்கு ஒப்புதல்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கடுமையான வரிகளை விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க லின்ட்சி ஓ. கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026 சட்ட மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) கையெழுத்திட்டுள்ளார்.

17 Sep 2026
• அமெரிக்கா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் 100% சுங்க வரி! அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்; இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?

உக்ரைன் மீதான போரைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யா மீது கூடுதல் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய மசோதாவிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

13 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் டீசல் விலை உச்சம்; இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.250ஐ தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான உயர்வை சந்தித்து வருகின்றது.

11 Sep 2026
• ஏமன்

ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த சவுதி கோரிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரிப்பு

ஏமனில் தீவிரமடைந்து வரும் ஹூதி கிளர்ச்சையாளர்களுக்கு எதிராக நேரடியாக ராணுவத் தாக்குதல்களை நடத்துமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

11 Sep 2026
• அமெரிக்கா

H-1B விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா கொடுத்த பேரதிர்ச்சி; வேலை இழந்தால் உடனடியாக வெளியேற ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் H-1B உள்ளிட்ட தற்காலிக பணி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்தால், புதிய நிறுவனத்தை தேட அல்லது தாய்நாடு திரும்ப அளிக்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை காலத்தை முற்றிலும் ரத்து செய்ய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

10 Sep 2026
• அமெரிக்கா

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி விளம்பரம்: ட்ரம்ப் நிர்வாகம் மீது கடுமையாகும் கொந்தளிப்பு

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை(DHS), டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத குடியேற்ற எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக வெளியிட்ட விளம்பரம், இந்தியர்கள் மற்றும் சீக்கியச் சமூகத்தினரை இலக்கு வைக்கும் வகையில் இனவெறியைத் தூண்டும் விதமாக அமைந்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.

அமெரிக்க இடைத்தேர்தல்: குடியரசுத் கட்சி வென்றால் மக்களுக்கு $5,000 'ட்ரம்ப் டிவிடெண்ட்'

டாலஸில் நடைபெற்ற குடியரசு கட்சியின் இடைத்தேர்தல் மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் நவம்பர் இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் குடியரசு கட்சி பெரும்பான்மையை தக்கவைத்தால், அமெரிக்க மக்களுக்கு தலா $5,000 (சுமார் ₹4.2 லட்சத்திற்கும் மேல்) 'ட்ரம்ப் டிவிடெண்ட்' தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

10 Sep 2026
• ஈரான்

அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பின் ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும்: டொனால்ட் ட்ரம்ப் கருத்து

ஈரானுடனான ராணுவ மோதல் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு இப்போர் "உடனடியாக முடிவுக்கு வரும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

07 Sep 2026
• அமெரிக்கா

நிலாவும் அமெரிக்காவிற்கு சொந்தமானதாம்: பிதற்றலின் உச்சத்தில் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சந்திரன் அமெரிக்காவிற்கு சொந்தமானது என்று உரிமை கோரியுள்ளார்.

05 Sep 2026
• ஈரான்

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது! பிக்ஏக்ஸ் மலையைத் தாக்க அமெரிக்கா திட்டம்; டிரம்ப் புதிய எச்சரிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் பிக்ஏக்ஸ் நிலத்தடி அணு ஆயுத மையத்தை அமெரிக்க ராணுவம் மிக விரைவில் தாக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

03 Sep 2026
• ஈரான்

7 மாதங்களுக்குப் பின் திடீர் திருப்பம்: ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ரகசியத் திட்டம்

ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவருவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மூத்த அதிகாரிகளுடன் ரகசியமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிக கப்பல்களை பாதுகாப்பாக கடத்திய அமெரிக்கப் படை

ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

01 Sep 2026
• அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக அணுஆயுதமா? பத்திரிகையாளர் கேள்வியால் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் 6-வது மாதமாக நீடித்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராக அணுஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முற்றிலும் நிராகரித்துள்ளார்.

29 Aug 2026
• வெனிசுலா

இனி வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்; டிரம்ப் அதிரடி

அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளுக்கு இடையே உலக வரலாற்றிலேயே மிக மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிரூத் சோஷியல் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்காது! சிஐஏ இயக்குநரின் திடீர் ரஷ்ய பயணத்திற்குப் பின் டிரம்ப் விளக்கம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எல்லைகள் மீது எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் நடத்த மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

28 Aug 2026
• அமெரிக்கா

அன்டாரியோ ஏரியை 'லேக் அமெரிக்கா' எனப் பெயர் மாற்றிய டிரம்ப்: கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'அன்டாரியோ ஏரியின்' பெயரை 'லேக் அமெரிக்கா' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

27 Aug 2026
• அமெரிக்கா

47 அமெரிக்க மாநிலங்களில் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு கடும் சரிவு: ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு மதிப்பீடு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. சமீபத்தில் வெளியான YouGov மற்றும் தி எகனாமிஸ்ட் அமைப்பின் தரவுகளின்படி, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 47 மாநிலங்களில் டிரம்பின் நிகர ஆதரவு விகிதம் மைனஸ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

27 Aug 2026
• அமெரிக்கா

ராணுவ முகாம்களில் மினி அணு உலைகள் அமைக்கிறது அமெரிக்கா: $2.2 பில்லியன் திட்டம் அறிவிப்பு

பொது மின்சார விநியோக அமைப்பை சார்ந்திருக்காமல் சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், அமெரிக்காவில் உள்ள 5 முக்கிய ராணுவ முகாம்களில் மைக்ரோ ரியாக்டர்கள் எனப்படும் சிறிய அணு உலைகளை அமைக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.

புதிய கண்ணிவெடி வைத்தால் உடனடி அழிவு! ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீட்டதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி

உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் பதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கடல் கண்ணிவெடிகளும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

25 Aug 2026
• அமெரிக்கா

H-1B விசா கட்டணம் $100,000 ஆக உயர்வு: ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவால் இந்தியர்களுக்கு விழுந்த பேரிடி

அமெரிக்காவில் புதிய H-1B விசா பெறுவதற்கான கட்டணத்தை $100,000-க்கும் அதிகமாக (சுமார் $103,265) நிரந்தரமாக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் திட்டம் வெளியிட்டுள்ளது.

25 Aug 2026
• அமெரிக்கா

2 லட்சம் பேரின் விசாக்களை ரத்து செய்ய ட்ரம்ப் அரசு முடிவு

அமெரிக்காவில் புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ள அல்லது அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 2,00,000 வெளிநாட்டினரின் பிசினஸ் (B1) மற்றும் சுற்றுலா (B2) விசாக்களை ரத்து செய்ய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது.

டிரம்ப்-மோடி சந்திப்பில் செய்தியாளர் சந்திப்பு வேண்டாம் என கோரிய இந்தியா, 'மறந்து போன' அமெரிக்கா

பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்ததை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கேள்விகள் கேட்கக் கூடாது என்ற கொள்கையை கடைப்பிடிக்குமாறு இந்தியா கோரியிருந்ததாக, இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் வெளிப்படுத்தியுள்ளார்.

24 Aug 2026
• ஈரான்

வரலாற்றின் மிகக் கொடூரமான பொருளாதாரப் போர்: ஈரான் மீது 'பொருளாதார D-Day' அறிவித்த அமெரிக்கா

ஈரானின் பொருளாதார பாதைகளை முற்றிலும் முடக்கும் வகையில் 'பொருளாதார டி-டே' (Economic D-Day) தாக்குதலை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்காவுக்கே சொந்தம்! புதிய மேப் வெளியிட்டு டொனால்ட் டிரம்ப் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச அளவில் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதையை புதிய அமெரிக்கப் பகுதி என சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளார்.

22 Aug 2026
• ஈரான்

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் எல்லை! ஈரான் எச்சரிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில்

ஈரான் நாட்டின் மீது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான நிதி மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அரசு ஆயத்தமாகி வருகிறது.

20 Aug 2026
• ஈரான்

ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்கா: ரகசிய எண்ணெய் வழித்தட நடவடிக்கை அம்பலம்

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் மிக முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவம் ரகசியமாக தனது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்தி வருகிறது.

20 Aug 2026
• அமெரிக்கா

அமெரிக்காவின் தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டியது: பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா?

அமெரிக்காவின் மொத்த தேசிய கடன் வரலாற்றில் முதன்முறையாக 40 டிரில்லியன் டாலர்களை (சுமார் ₹3,300 லட்சம் கோடி) கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20 Aug 2026
• அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக 'எகனாமிக் டி-டே' பிரகடனம்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக நிலவி வரும் தீவிரப் போர் சூழலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.

19 Aug 2026
• அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடு தளர்கிறதா? ஓமன் கடல் வழியை பயன்படுத்தும் வணிகக் கப்பல்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிரமான மோதல் போக்குக்கு மத்தியிலும், ஹார்முஸ் நீரிணையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரானின் அதிகாரம் தளர்வடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி "புதிய அமெரிக்க பிராந்தியம்": டொனால்ட் டிரம்ப் பதிவால் அமெரிக்கா - ஈரான் இடையே உச்சக்கட்ட மோதல்

ஹார்முஸ் ஜலசந்தியை "அமெரிக்காவின் புதிய பிராந்தியம்" எனச் சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்துள்ளார்.

18 Aug 2026
• அமெரிக்கா

அமெரிக்க தேர்தல் சட்டத்தில் மாற்றம்: இந்திய வாக்காளர் அடையாள அட்டை முறையை சுட்டிக்காட்டி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் வாக்காளர் பதிவின் போது குடியுரிமைச் சான்றையும், வாக்களிக்கும் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் கட்டாயமாக்கும் 'SAVE America Act' சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.