அன்டாரியோ ஏரியை 'லேக் அமெரிக்கா' எனப் பெயர் மாற்றிய டிரம்ப்: கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'அன்டாரியோ ஏரியின்' பெயரை 'லேக் அமெரிக்கா' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய டிரம்ப், இப்பெயர் மாற்றம் அமெரிக்க கூட்டாட்சிப் பயன்பாட்டில் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதனைத் தான் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING NEWS!
— The White House (@WhiteHouse) August 27, 2026
TO: Office of the Secretary, Department of the Interior
FROM: Director, U.S. Geological Survey
RE: Lake America rename
Sir,
As of 4:30 pm today the U.S. Geological Survey has officially designated the former Lake Ontario to be renamed as Lake America in all… pic.twitter.com/m4UixlNpEw
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
⚠️ TDS TRIGGER WARNING: Lake America is officially on the map. 🇺🇸🦅
— The White House (@WhiteHouse) August 27, 2026
What’s next? pic.twitter.com/YCQoBXpt79
வரலாறு
"400 ஆண்டுகால வரலாறு": கனடா பிரதமர் பதிலடி
டிரம்பின் இந்த முடிவை உடனடியாக நிராகரித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, எக்ஸ் (X) தளத்தில், "'அன்டாரியோ' என்ற பெயர் வெண்டாட் பழங்குடி மொழியிலிருந்து உருவானது. இதற்கு 'அழகான ஏரி' அல்லது 'பெரிய ஏரி' என்று பொருள். இப்பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வரலாறு கொண்டது. கனடாவின் கூட்டமைப்பு உருவாவதற்கும், அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கும் முன்பிருந்தே இப் பெயர் புழக்கத்தில் உள்ளது".
"அமெரிக்கா தனது வர்த்தக உறவுகள், வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பெயர்முறைகளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், கனடா மக்கள் என்றும் இதனை 'அன்டாரியோ ஏரி' என்றே அழைப்பார்கள்" என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The name Lake Ontario comes from the Wendat word Ontari’io, which, appropriately, means “the lake is beautiful, the lake is big”.
— Mark Carney (@MarkJCarney) August 27, 2026
The name is more than 400 years old, predating both the Confederation of Canada and the Declaration of Independence of the United States of America.…
நிராகரிப்பு
எதிர்ப்பு தெரிவிக்கும் நியூயார்க் ஆளுநர்
அன்டாரியோ ஏரியின் 52 சதவீத பரப்பு கனடாவிலும், எஞ்சிய பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநில எல்லைக்குள்ளும் அமைந்துள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவை நியூயார்க் மாநில ஆளுநர் நிராகரித்துள்ளார். "நியூயார்க் நிர்வாகம் ஒருபோதும் இப் பெயரைப் பயன்படுத்தாது" என அவர் தெரிவித்துள்ளார்.
டந்த வாரம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பில்லியன் டாலர் மதிப்பிலான சுங்க வரிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே மோதல் நிலவி வருகிறது.
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்ற வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது கனடாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக 2025 ஜனவரியில் 'மெக்சிகோ வளைகுடாவை', 'அமெரிக்க வளைகுடா' என டிரம்ப் பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.