Loading...
ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த சவுதி கோரிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரிப்பு
இளவரசர் முகமது பின் சல்மான் விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்

ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த சவுதி கோரிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2026
03:43 pm

செய்தி முன்னோட்டம்

ஏமனில் தீவிரமடைந்து வரும் ஹூதி கிளர்ச்சையாளர்களுக்கு எதிராக நேரடியாக ராணுவத் தாக்குதல்களை நடத்துமாறு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி Axios செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஏமனின் கடலோர நகரமான மோகா நோக்கி ஹூதி படைகள் முன்னேறி வந்த சூழலில், சவுதி ஆதரவு யேமன் படைகள் பின்வாங்கின. இதையடுத்து, சவுதி இளவரசர் MBS, அமெரிக்க அதிபர் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராணுவ உதவியைக் கோரினார். எனினும், ஏமனில் நேரடியாக தலையிட்டுத் தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை.

பின்னணி

பின்னணியும் முக்கிய நகர்வுகளும்

நேரடி ராணுவத் தாக்குதலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், ஹூதி படைகளின் இருப்பிடங்கள் மற்றும் இலக்குகள் தொடர்பான உளவுத்துறை தரவுகளை சவுதி அரேபியாவுக்கு வழங்க அமெரிக்கா சம்மதித்துள்ளது.

செங்கடல் வழியிலான சர்வதேசக் கடல்சார் வர்த்தகப் பாதுகாப்பை உறுதி செய்வதே வாஷிங்டனின் முதன்மை நோக்கம் என்றும், ஏமன் போரில் நேரடியாகக் களமிறங்குவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல என்றும் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதற்றம்

தீவிரமடையும் செங்கடல் பதற்றம்

ஹூதி படைகள் மோகா நகரை கைப்பற்றியதுடன், செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வர்த்தக பாதையான பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள தீவுகளையும் கைப்பற்றியுள்ளன.

சுமார் 25 கி.மீ அகலம் கொண்ட இந்த குறுகிய பகுதியில் ஹூதிகள் நிலைநிறுத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவின் கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லும் கச்சா எண்ணெய் குழாய் குறைந்தது 8 இடங்களில் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதத்தில் 'அமெரிக்க உதவியின்றி ஹூதிகளை எதிர்கொள்ள முடியும்' எனக் கூறிய சவுதி அரேபியா, தற்போது ஹூதிகளின் கரம் ஓங்குவதால் அமெரிக்காவின் கூடுதல் உதவிகளை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT