Loading...
'ஒட்டுமொத்த நாட்டையும் அழித்துவிடுவேன்...': டிரம்பின் பகிரங்க எச்சரிக்கையும், ஈரானின் 7 நிபந்தனைகளும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்

'ஒட்டுமொத்த நாட்டையும் அழித்துவிடுவேன்...': டிரம்பின் பகிரங்க எச்சரிக்கையும், ஈரானின் 7 நிபந்தனைகளும்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
07:26 am

செய்தி முன்னோட்டம்

ஈரானுடனான மோதல் போக்கில் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், விரைவில் மிகப்பெரிய சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய டிரம்ப், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு மூன்று வழிகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானை முற்றிலும் அழிப்பது, அந்நாட்டின் பொருளாதாரத்தை சீரழிப்பது அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்பது ஆகிய விருப்பங்கள் உள்ளதாகத் தெரிவித்த அவர், ஈரான் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்துள்ளார்.

கோரிக்கை

கத்தார் வழியாக ஈரான் சமர்ப்பித்த 7 கோரிக்கைகள்

இதனிடையே, அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஈரான் 7 முக்கிய நிபந்தனைகளை கத்தார் மத்தியஸ்தம் மூலமாக வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளது.

அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய நிதியை மீள வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை விலக்க வேண்டும் போன்றவை ஈரானின் முதன்மை கோரிக்கைகளாகும்.

ஐநா சபையின் பொதுக்கூட்டத்திற்காக நியூயார்க் வரவுள்ள ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாராக இருப்பதாக டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்கா தங்களுக்கு எதிராக புதிய ராணுவ நடவடிக்கையை தொடங்க ஆயத்தமாகி வருவதாக தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கும் பிராந்திய நாடுகள் அனைத்தும் போரில் நேரடியாகப் பங்கேற்பதாகவே கருதப்படும் என எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT