Loading...
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது! பிக்ஏக்ஸ் மலையைத் தாக்க அமெரிக்கா திட்டம்; டிரம்ப் புதிய எச்சரிக்கை
பிக்ஏக்ஸ் மலையைத் தாக்க அமெரிக்கா திட்டம்

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது! பிக்ஏக்ஸ் மலையைத் தாக்க அமெரிக்கா திட்டம்; டிரம்ப் புதிய எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 05, 2026
08:16 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் பிக்ஏக்ஸ் நிலத்தடி அணு ஆயுத மையத்தை அமெரிக்க ராணுவம் மிக விரைவில் தாக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும், பிக்ஏக்ஸ் மலையில் சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் இருந்தால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறினார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கை

அதிபர் டிரம்ப் பேசுகையில், "ஈரான் வசம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

பிக்ஏக்ஸ் மலையில் நடக்கும் ஒவ்வொரு நகர்வையும் நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

அங்கு ஏதேனும் தவறான நடவடிக்கைகள் நடந்தால், மிகக் கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடத்தும்" என்று கூறினார்.

மத்திய கிழக்கில் அமைதியை சீர்குலைக்க ஈரான் முயற்சித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலையைக் குறிவைக்க காரணம்

அமெரிக்கா பிக்ஏக்ஸ் மலையைக் குறிவைப்பது ஏன்?

ஈரான் தலைநகர் தஹ்ரானில் இருந்து தெற்கே 225 கிமீ தொலைவில் உள்ள நடான்ஸ் அணுமின் நிலையத்தின் அருகே இந்த பிக்ஏக்ஸ் மலை அமைந்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற 12 நாள் போரின் போது, நடான்ஸ் அணுமையத்தின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பி-2 பாம்பர் விமானங்கள் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி பலத்த சேதத்தை ஏற்படுத்தின.

இதனால் ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைப் பிக்ஏக்ஸ் மலைப் பகுதிக்கு மாற்றியது.

ADVERTISEMENT

அணு மையம்

100 மீட்டர் ஆழத்தில் ஈரானின் நிலத்தடி அணு மையம்

தற்போது பிக்ஏக்ஸ் மலையில் 2.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பூமிக்குக் கீழே 80 முதல் 100 மீட்டர் ஆழத்தில் ஈரான் புதிய நிலத்தடி மையத்தைக் கட்டி வருகிறது.

வான்வழித் தாக்குதல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் விசேஷப் படைகளின் பாதுகாப்பில் உள்ள இந்த மையத்தில் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் சென்ட்ரிஃபியூஜ் கருவிகள் தயாரிக்கப்படலாம் என அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது.

இதனாலேயே பிக்ஏக்ஸ் மலையைத் தங்களது முதன்மை இலக்காக அமெரிக்கா நிர்ணயித்துள்ளது.

ADVERTISEMENT