அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி விளம்பரம்: ட்ரம்ப் நிர்வாகம் மீது கடுமையாகும் கொந்தளிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை(DHS), டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத குடியேற்ற எதிர்ப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக வெளியிட்ட விளம்பரம், இந்தியர்கள் மற்றும் சீக்கியச் சமூகத்தினரை இலக்கு வைக்கும் வகையில் இனவெறியைத் தூண்டும் விதமாக அமைந்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' திரைப்பட கதாபாத்திரமான ஆப்டிமஸ் பிரைம், தாடி மற்றும் தலைப்பாகை அணிந்த இந்திய வம்சாவளி நபர் ஒருவரை தடுப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில், "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே... எங்கள் சாலைகளில் இருந்து வெளியேறுங்கள். உங்களுக்கு வாகனம் ஓட்டத் தெரியவில்லை, மிஸ்டர் சிங்!" என்ற சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றுள்ளது.
கடும் எதிர்ப்பு
அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு
அமெரிக்காவின் லாரி ஓட்டுநர் துறையில் சீக்கிய மற்றும் பஞ்சாபி சமூகத்தினர் பெருமளவில் பங்களித்து வரும் நிலையில், 'சிங்' என்ற பெயரையும் இந்தியர்களின் தோற்றத்தையும் தவறாக சித்தரித்ததற்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விளம்பரம் அப்பட்டமான இனவெறி, இந்திய எதிர்ப்பு மற்றும் பிற்போக்குத்தனமான செயல் எனக் சாடியுள்ளது.
தோற்றத்தை வைத்து மக்களைத் தவறாகக் கணிக்கும் போக்கு மீண்டும் அமெரிக்காவில் அதிகரித்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களிலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.