Loading...
'அமெரிக்கா மீது தாக்குதல் இல்லை, ஆனால்...': டிரம்பிற்கு ஹவுதி கொடுத்த வாக்குறுதி
அமெரிக்க அதிகாரிகள் தங்களுடன் தொடர்புகொண்டதாக ஹவுதி அரசியல் பிரிவைச் சேர்ந்த அகமது அல்-புகைதி தெரிவித்துள்ளார்

'அமெரிக்கா மீது தாக்குதல் இல்லை, ஆனால்...': டிரம்பிற்கு ஹவுதி கொடுத்த வாக்குறுதி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
09:25 am

செய்தி முன்னோட்டம்

செங்கடல் பகுதியில் பயணம் செய்யும் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம் உறுதியளித்துள்ளனர். ஏமனின் மேற்கு பகுதியில் உள்ள பாப் அல்-மந்தேப் நீரிணைப்பை கைப்பற்றிய பிறகு, அமெரிக்க அதிகாரிகள் தங்களுடன் தொடர்புகொண்டதாக ஹவுதி அரசியல் பிரிவைச் சேர்ந்த அகமது அல்-புகைதி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவை தவிர அமெரிக்கா உட்பட வேறு எந்த நாட்டின் கப்பல்களையும் தங்களது அமைப்பு இலக்கு வைக்காது என்று வாஷிங்டனுக்கு உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியஸ்தம்

டிரம்பின் அறிவிப்பும் கத்தார் மத்தியஸ்தமும்

ஹவுதி அமைப்பினர் தங்களை தொடர்பு கொண்டு பேச விரும்பியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே, செங்கடலில் தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க ஹவுதிகள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவுடன் சுமூக நிலை நீடித்தாலும், சவுதி அரேபியாவிற்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று ஹவுதிகள் எச்சரித்துள்ளனர்.

ஏமன் துறைமுகங்கள் மீதான சவுதியின் 10 ஆண்டு கால முற்றுகையைத் திரும்பப் பெறும் வரை இந்த மோதல் நீடிக்கும் என்றும், சவுதிக்கு ஆதரவாக பிற நாடுகள் போரில் களமிறங்கினால் சர்வதேச அளவில் பெரும் போரை எதிர்கொள்ளத் தயார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

போர்

யேமனில் மீண்டும் தீவிரமடையும் போர்

சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் சனா விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் கப்பல்களை இலக்கு வைத்து ஹவுதிகள் மீண்டும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனால் 2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்து, யேமனில் மீண்டும் கடுமையான போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT