Loading...
47 அமெரிக்க மாநிலங்களில் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு கடும் சரிவு: ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 47 மாநிலங்களில் டிரம்பின் நிகர ஆதரவு விகிதம் மைனஸ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

47 அமெரிக்க மாநிலங்களில் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு கடும் சரிவு: ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 27, 2026
06:22 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மக்கள் ஆதரவு மதிப்பீடு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. சமீபத்தில் வெளியான YouGov மற்றும் தி எகனாமிஸ்ட் அமைப்பின் தரவுகளின்படி, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 47 மாநிலங்களில் டிரம்பின் நிகர ஆதரவு விகிதம் மைனஸ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தத் தரவுகள் ஆளும்கட்சியான குடியரசு கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் வெறும் 3 மாநிலங்களில் மட்டுமே டிரம்பிற்கு ஆதரவு சாதகமாக (Positive) உள்ளது (வயோமிங்: +14%, ஐடஹோ: +9% , மேற்கு வர்ஜீனியா: +6%) இந்த மூன்று மாநிலங்களும் குடியரசுக் கட்சியின் வலுவான கோட்டைகளாகக் கருதப்படுபவை ஆகும்.

வீழ்ச்சி

மிக மோசமான வீழ்ச்சி அடைந்த பகுதிகள்

தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் டிரம்பின் ஆதரவு விகிதம் மிகக் குறைவாக -83% ஆக பதிவாகியுள்ளது.

மேரிலேண்ட் (-50%) மற்றும் வெர்மான்ட் (-50%) ஆகிய மாநிலங்களும் மிகக் குறைந்த ஆதரவைப் பெற்றுள்ளன.

டெமாக்ரடிக் கட்சியின் கோட்டைகளான நியூயார்க் (-46%), வாஷிங்டன் (-42%), இலினாய்ஸ் (-41%), கலிபோர்னியா (-34%) மற்றும் நியூ ஜெர்சி (-34%) ஆகியவற்றிலும் டிரம்பின் ஆதரவு கடுமையாகச் சரிந்துள்ளது.

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் புளோரிடா, பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களிலும் டிரம்பிற்கு மக்கள் ஆதரவு எதிரிடையாக மாறியுள்ளது.

தாக்கம்

இடைத்தேர்தலில் தாக்கம் ஏற்படுமா?

தேசிய அளவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 36% அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

57% மக்கள் அவரது செயல்பாடுகளுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, கட்சி சார்பற்ற சுயேச்சை வாக்காளர்களிடையே டிரம்பிற்கான ஆதரவு பெருமளவில் குறைந்துள்ளது.

வரவிருக்கும் 2026 இடைத்தேர்தலில் காங்ரஸில் தங்கள் பெரும்பான்மையை தக்கவைக்க குடியரசு கட்சி போராடி வரும் நிலையில், டிரம்பின் இந்தச் சரிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.

ADVERTISEMENT