Loading...
ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்கா: ரகசிய எண்ணெய் வழித்தட நடவடிக்கை அம்பலம்
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவம் ரகசியமாக தனது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்தி வருகிறது

ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்கா: ரகசிய எண்ணெய் வழித்தட நடவடிக்கை அம்பலம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2026
02:31 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் மிக முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவம் ரகசியமாக தனது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்தி வருகிறது. ஓமன் நாட்டின் கடற்கரையை ஒட்டியுள்ள தெற்கு கடல் வழியில் ஒரு சிறப்பு பாதுகாக்கப்பட்ட வர்த்தக வழித்தடத்தை உருவாக்கி, சர்வதேச எண்ணெய் விநியோகத்தை அமெரிக்க படைகள் மீட்டு வருகின்றன.

ரகசிய நடவடிக்கை

அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கை எப்படிச் செயல்படுகிறது?

'ஃபோர்ட் ப்ராக்' அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இருந்து இந்த ஒட்டுமொத்தக் கடல்சார் நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

போர் தொடங்குவதற்கு முன் தினமும் கடந்து சென்ற எண்ணெய்யின் அளவில் பாதியான, சுமார் 10 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தற்போது இந்நடவடிக்கை மூலம் தினமும் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறது.

சில இரவுகளில் இதன் அளவு 15 முதல் 20 மில்லியன் பேரல்கள் வரை உயர்கிறது.

அமெரிக்க விமானப் படை தனது போர் விமானங்களைக்கொண்டு ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து வர்த்தகக் கப்பல்களுக்கு வான்வழிப் பாதுகாப்பு அளித்து வருகிறது.

தொடர் தாக்குதல்கள் மூலம் ஈரானின் ரேடார் மற்றும் கடற்படை கண்காணிப்புச் சாதனங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதால், அமெரிக்காவால் இந்த வழித்தடத்தை எளிதாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்துள்ளது.

பதிலடி

ஈரானின் தாக்குதல்களும் அமெரிக்காவின் பதிலடியும்

அமெரிக்கா இந்த வழியை திறந்திருந்தாலும், ஈரானிய புரட்சிகரக் காவல் படை (IRGC) ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சமீபத்தில் வர்த்தக கப்பல்களை குறிவைத்து அனுப்பப்பட்ட 8 ஈரானிய ட்ரோன்கள் மற்றும் 2 க்ரூஸ் ஏவுகணைகளை அமெரிக்கப் படைகள் வான் வழியிலேயே சுட்டு வீழ்த்தின.

"ஈரான் படைகள் சிறு தொல்லைகளைத் தரலாமே தவிர, ஹார்முஸ் நீரிணையை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை, நாங்கள் தான் கட்டுப்படுத்துகிறோம்" என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தாக்கம்

உலகப் பொருளாதாரத்தில் இதன் தாக்கம்

ஹார்முஸ் நீரிணை மீண்டும் தற்காலிகமாகத் திறக்கப்பட்டு எண்ணெய் விநியோகம் நடைபெறுவது உலகளவில் கச்சா எண்ணெய் வில ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை தவிர்க்கவும் வழிவகுத்துள்ளது.

இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஹார்முஸ் நீரிணை வழியே பெருமளவில் எண்ணெய் வெளியேறி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாகக் கட்டுப்படுத்தும் யோசனையையும் டிரம்ப் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT