Loading...
கூகுள் ஜெமினி இலவச சேவையில் பெரிய மாற்றம்! அக்டோபர் 9 முதல் எந்த மாடல்கள் கிடைக்கும்?
கூகுள் ஜெமினி இலவச சேவையில் பெரிய மாற்றம்

கூகுள் ஜெமினி இலவச சேவையில் பெரிய மாற்றம்! அக்டோபர் 9 முதல் எந்த மாடல்கள் கிடைக்கும்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 07, 2026
04:48 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் நிறுவனம் தனது 'ஜெமினி AI' சேவையை பயன்படுத்தும் இலவச கணக்கு பயனர்களுக்கு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் அக்டோபர் 9 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதுவரை கூகுள் ஜெமினி சேவையை இலவசமாக பயன்படுத்தும் பயனர்கள் ஜெமினி ஃப்ளாஷ் லைட், ஃப்ளாஷ், மற்றும் ப்ரோ ஆகிய மூன்று மாடல்களில் தேவையானதை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அக்டோபர் 9 முதல் இலவசப் பயனர்கள் ஃப்ளாஷ் லைட் மாடலை மட்டுமே பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர மேம்பட்ட மாடல்களை பயன்படுத்தக் கட்டண சந்தா கட்டாயமாக்கப்படுகிறது.

மாற்றங்கள்

கூகுள் AI சந்தா பிளான்களில் ஏற்படும் மாற்றங்கள்

இலவச திட்டம்: ஃப்ளாஷ் லைட் மட்டுமே பயன்படுத்த முடியும்.

கூகுள் AI பிளஸ்-இன் மாத சந்தா $4.99 / மாதம். இதில் ஃப்ளாஷ் லைட் & ஃப்ளாஷ் பயன்படுத்தலாம்.

கூகுள் AI ப்ரோவிற்கு மாத சந்தா $19.99. இதில் ஃப்ளாஷ் லைட், ஃப்ளாஷ், ப்ரோ & மற்றும் டீப் திங்க் பயன்படுத்தலாம்.

கூகுள் AI அல்ட்ராவிற்கு மாதம் $99.99 கட்டணம் செலுத்தினால் அனைத்து மாடல்கள் + உச்சபட்ச பயன்பாட்டு எல்லையில் பயனர்கள் பயன்படுத்தலாம்.

கட்டுப்பாடு

AI பிளஸ் பயனர்களுக்கும் கட்டுப்பாடு

இந்த மாற்றங்களால் கூகுள் AI பிளஸ் ($4.99/மாதம்) சந்தாதாரர்களும் பாதிக்கப்படுவர்.

அவர்கள் இனி ஜெமினி ப்ரோ (Gemini Pro) மாடலைப் பயன்படுத்த முடியாது.

மேலும், சிக்கலான கணக்கீடுகள் மற்றும் உயர்நிலை ரீசனிங் திறனைக் கொண்ட Deep Think அம்சம் மற்றும் ஜெமினி ப்ரோ மாடல்கள் இனி மாதம் $19.99 மதிப்புள்ள AI ப்ரோ அல்லது $99.99 மதிப்புள்ள AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT