Loading...
தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு 70% தீர்வு: ஆயுஷ் அமைச்சக ஆய்வு தகவல்
ஆயுர்வேத மேத்ய ரசாயன சூர்ணம் மற்றும் பிரத்யேக யோகாசன பயிற்சிகள் தூக்கத்தில் சிறுநீர் கழித்தலை குறைக்கும்.

தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு 70% தீர்வு: ஆயுஷ் அமைச்சக ஆய்வு தகவல்

எழுதியவர் Vasuki
Oct 06, 2026
04:38 pm

செய்தி முன்னோட்டம்

குழந்தை பருவத்தில் பல பெற்றோர்களை பெரும் கவலைக்குள்ளாக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக படுக்கையில் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய விரிவான மருத்துவ ஆய்வில், ஆயுர்வேத மருந்துகளுடன் குறிப்பிட்ட யோகாசனப் பயிற்சிகளையும் ஒருங்கிணைத்துப் பின்பற்றுவதன் மூலம் இப்பிரச்சனைக்கு 70 சதவீதம் வரை தீர்வு காண முடிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற ஏஒய்யு மருத்துவ ஆய்விதழில் இந்த ஆய்வின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டு சர்வதேச மருத்துவத்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சிகிச்சை

மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சை முறைகள்

ஜாம்நகர் ஆயுர்வேத நிறுவனத்தின் கெளமார்பிரித்தியா (குழந்தைகள் நல மருத்துவம்) துறையால் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட 38 குழந்தைகளிடம் 8 வார காலத்திற்கு இந்த தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பங்கேற்ற குழந்தைகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

முதல் குழுவில் இடம்பெற்ற குழந்தைகளுக்கு பிராமி, சங்கபுஷ்பி, யாஷ்டிமது, குடுச்சி ஆகிய மூலிகைகள் கலந்த 'மேத்ய ரசாயன சூர்ணா' மருந்து தினமும் பாலுடன் இருவேளை வழங்கப்பட்டது.

இரண்டாவது குழுவிலிருந்த குழந்தைகளுக்கு அதே மூலிகை மருந்துடன் சேர்த்து, உத்கடாசனம், அர்தா-ஷலாபாசனம், புஜங்காசனம் மற்றும் ஷவாசனம் ஆகிய யோகாசன பயிற்சிகள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முறையாக பயிற்றுவிக்கப்பட்டன.

ஆய்வு

நினைவாற்றல் வளர்ச்சி

ஆய்வின் முடிவில், ஆயுர்வேத மருந்தை மட்டுமே உட்கொண்ட முதல் குழு குழந்தைகளிடம் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை 38 சதவீதம் குறைந்திருந்தது.

ஆனால், அதே மருந்துடன் யோகாசன பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்ட இரண்டாவது குழு குழந்தைகளிடம் 70 சதவீத அளவிற்கு அசாத்திய முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

மேலும், மருந்தை மட்டும் உட்கொண்ட குழந்தைகளின் நினைவாற்றலில் 31 சதவீத முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், யோகாவையும் சேர்த்துக் கற்றுக்கொண்ட குழந்தைகளின் நினைவாற்றலில் சுமார் 61 சதவீதம் அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆயுர்வேதமும் யோகாவும் இணைந்து குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வை அளிக்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT