ஈரான் போரில் 81 போர் விமானங்களை இழந்த அமெரிக்க ராணுவம்: ரூ.27,500 கோடி இழப்பு என ஆராய்ச்சி அறிக்கை
செய்தி முன்னோட்டம்
ஈரானுடனான ராணுவ மோதல் தொடங்கியது முதல் அமெரிக்க ராணுவம் இதுவரை 81 போர் விமானங்களை இழந்துள்ளதாகவும் அல்லது சேதமடைந்துள்ளதாகவும் அமெரிக்க காங்கிரஷனல் ஆராய்ச்சி சேவையின் (CRS) புதிய அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 வரையிலான கணக்கீட்டின்படி, இழக்கப்பட்ட போர் உபகரணங்களின் மாற்று மதிப்பு சுமார் $3.3 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹27,500 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் அதிநவீன F-35A லைட்னிங் II ஸ்டெல்த் ரக போர் விமானம் ஒன்றும், 12 F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்களும் அடங்கும்.
ட்ரோன்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் மற்றும் ட்ரோன்கள்
குவைத்தில் மார்ச் 2 அன்று நிகழ்ந்த தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் (Friendly Fire) மூன்று F-15 விமானங்கள் வீழ்த்தப்பட்டன.
மேலும் குறைந்தது 45 MQ-9 ரீப்பர் (Reaper) ரக ட்ரோன்களையும் அமெரிக்கா இழந்துள்ளது.
ஒரு ட்ரோனின் மதிப்பு $30 மில்லியன் முதல் $50 மில்லியன் வரை இருக்கும் நிலையில், இந்த இழப்பால் அமெரிக்க விமானப்படையின் ட்ரோன் படைகளின் எண்ணிக்கை 135 ஆகக் குறைந்துள்ளது.
இது அதன் குறைந்தபட்சத் தேவையான 189 ஐ விட மிகக் குறைவாகும்.
போர் உபகரணங்களின் இழப்புடன் சேர்த்து, ஈரான் மோதலுக்கான மொத்த அமெரிக்கச் செலவு $43.6 பில்லியனை எட்டியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைக் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது ஆகஸ்ட் மாத மதிப்பிடப்பட்டத் தொகையை விட $5 பில்லியன் அதிகமாகும்.