Loading...
H-1B விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா கொடுத்த பேரதிர்ச்சி; வேலை இழந்தால் உடனடியாக வெளியேற ட்ரம்ப் உத்தரவு
60 நாட்கள் சலுகை காலத்தை முற்றிலும் ரத்து செய்ய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது

H-1B விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா கொடுத்த பேரதிர்ச்சி; வேலை இழந்தால் உடனடியாக வெளியேற ட்ரம்ப் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2026
07:51 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் H-1B உள்ளிட்ட தற்காலிக பணி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்தால், புதிய நிறுவனத்தை தேட அல்லது தாய்நாடு திரும்ப அளிக்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை காலத்தை முற்றிலும் ரத்து செய்ய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) கூட்டாட்சி பதிவேட்டில் வெளியிட்டுள்ள புதிய வரைவு விதியின்படி, பணி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த அடுத்த நாளே அவர்களின் சட்டப்பூர்வ தகுதி முடிவுக்கு வரும்.

பாதிப்பு

இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பாதிப்பு

எனினும் இந்த புதிய விதி, வரவு திட்டத்திற்கான 60 நாட்கள் பொதுமக்கள் கருத்துக் கேட்பு காலத்திற்குப் பிறகே இறுதி செய்யப்பட்டு அமலுக்கு வரும்.

H-1B மட்டுமின்றி L-1 (நிறுவன இடமாற்றம்), O-1 (சிறப்புத் திறன்), TN, E-1, E-2 மற்றும் E-3 விசா வைத்திருப்பவர்களும் இதன் மூலம் பாதிக்கப்படுவர்.

2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த இந்த 60 நாள் சலுகைக் காலம், இந்திய மற்றும் சீனத் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வேலை மாறுவதற்கும் குடும்பத்துடன் தாய்நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தது.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், எல்டிஐமைண்ட்ட்ரீ (LTIMindtree) போன்ற இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், டெலாய்ட், பிடபிள்யூசி போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்த நடவடிக்கை பெரும் சவாலை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT