Loading...
வரலாற்றின் மிகக் கொடூரமான பொருளாதாரப் போர்: ஈரான் மீது 'பொருளாதார D-Day' அறிவித்த அமெரிக்கா
ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு அமெரிக்க நிதியமைச்சகம் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது

வரலாற்றின் மிகக் கொடூரமான பொருளாதாரப் போர்: ஈரான் மீது 'பொருளாதார D-Day' அறிவித்த அமெரிக்கா

எழுதியவர் Venkatalakshmi V
Aug 24, 2026
07:14 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் பொருளாதார பாதைகளை முற்றிலும் முடக்கும் வகையில் 'பொருளாதார டி-டே' (Economic D-Day) தாக்குதலை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பினான்சியல் டைம்ஸ் இதழில் எழுதியுள்ள கட்டுரையில், ஒரு எதிரி நாட்டிற்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் "மிகப்பெரிய நிதித் தாக்குதல்" இதுவே என்று பெசென்ட் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் கச்சா எண்ணெய் வணிகம், நிதி பரிவர்த்தனைகள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் சேவைகளுக்கு உதவி கரங்கள் நீட்டும் பிற நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படவுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எச்சரிக்கை

"எங்களுடன் நிற்கிறீர்களா அல்லது எதிரிக்காகவா?"

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரானுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கு அமெரிக்க நிதியமைச்சகம் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் பக்கம் நிற்கிறதா அல்லது ஈரானின் பக்கம் நிற்கிறதா என்பதை விரைவாக தீர்மானிக்க வேண்டும் என்றும், தவறினால் கடுமையான தடைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பதில்

ஈரானின் பதில் தாக்குதல் எச்சரிக்கை

அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுக்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) மற்றும் அதன் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் பொருளாதாரப் போர் தொடர்ந்தால், ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா வழியாக நடைபெறும் அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளும் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இத்தகைய தீவிர பொருளாதார நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT