Loading...
தேசிய விண்வெளி தினம் 2026: ஜென் ஜி மற்றும் தனியார் துறை குறித்துப் பிரதமர் மோடி பெருமிதம்
தேசிய விண்வெளி தினம்

தேசிய விண்வெளி தினம் 2026: ஜென் ஜி மற்றும் தனியார் துறை குறித்துப் பிரதமர் மோடி பெருமிதம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2026
09:48 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியதன் நினைவாகக் கொண்டாடப்படும் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கும் விஞ்ஞானிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2047க்குள் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்கை எட்டுவதற்கு விண்வெளித் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

ஜென் ஜி

ஜென் ஜி இளைஞர்களின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குப் பாராட்டு

சோஷியல் மீடியா தளத்தில் பிரதமர் பகிர்ந்துள்ள வீடியோ செய்தியில், நாட்டின் ஜென் ஜி பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகள் விண்வெளித் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதைப் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மேம்பட்ட உந்துவிசை அமைப்புகள், கலப்புப் பொருட்கள், ராக்கெட் நிலைகள் மற்றும் சிறப்புச் செயற்கைக்கோள் தளங்களை உருவாக்கும் பணிகளில் நாட்டின் இளம் தலைமுறையினர் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சர்வதேச முதலீடுகள்

சர்வதேச முதலீட்டாளர்களைக் கவரும் காந்தமாக மாறியுள்ள விண்வெளித் துறை

இந்திய அரசு விண்வெளித் துறையைத் தனியார் அமைப்புகளுக்குத் திறந்து விட்டதன் மூலம், இந்தியாவின் தனியார் விண்வெளித் திறமை உலக அளவில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியாவின் விண்வெளித் துறை சர்வதேச முதலீட்டாளர்களைக் கவரும் ஒரு சக்திவாய்ந்த காந்தமாக மாறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோவின் தொடர் சாதனைகள் நாட்டின் பல லட்சம் இளம் மாணவர்களை அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையைத் தங்களின் எதிர்கால வாழ்க்கையாகத் தேர்ந்தெடுக்கப் பெரும் தூண்டுதலாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

வேண்டுகோள் 

விண்வெளித் தொழில்நுட்பங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டுகோள்

சமீபத்தில் இந்தியாவின் 20 முன்னணி விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் பிரதமர் மோடி நடத்திய விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருந்தார்.

அக்கூட்டத்தில், விண்வெளி சார்ந்த அதிநவீனத் தொழில்நுட்பங்களை விவசாயம், காலநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற மக்களுக்கு நேரிடையாக உதவும் துறைகளிலும் விரிவாக்கம் செய்து, குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமாறு இளம் தொழில்முனைவோர்களுக்குப் பிரதமர் அன்போடு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சந்திராயன் 3

சந்திரயான் 3 நிலவில் தரை இறங்கிய வரலாற்று சிறப்புமிக்க நாள்

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி, இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரை இறக்கிய உலகின் முதல் நாடு என்ற வரலாற்றுப் பெருமையை இந்தியா பெற்றது.

இந்த மகத்தான சாதனையை ஆண்டுதோறும் போற்றும் வகையிலேயே ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக நாடு முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT