Loading...
மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026: இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா?
மகளிர் ஹாக்கி உலகக்கோப்பையில் இந்தியாவிற்கான அரையிறுதி வாய்ப்பு

மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026: இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2026
10:25 am

செய்தி முன்னோட்டம்

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் எஃப்ஐஎச் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை 2026 தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில், இந்திய அணி நெதர்லாந்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இருப்பினும், சலீமா டேடே தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் நீடிக்கின்றன. குழு ஈ பிரிவில் ஒரு புள்ளியுடன் 4வது இடத்தில் உள்ள இந்தியா, தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

கட்டாய வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கட்டாய வெற்றி வாய்ப்பு

இரண்டாம் சுற்றில் உள்ள 4 அணிகளில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்.

ஆஸ்திரேலிய அணி சீனாவுக்கு எதிரான போட்டியை 1-1 என டிராவில் முடித்து 1 புள்ளியுடன் கோல் அடிப்படையில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்திய அணிக்குக் கட்டாயமான ஒன்றாகும்.

மற்றொரு போட்டி

நெதர்லாந்து - சீனா போட்டியின் முக்கியத்துவம்

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது மட்டுமே போதாது. அதற்கு முன் நடைபெறும் நெதர்லாந்து மற்றும் சீனா இடையேயான போட்டியின் முடிவும் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

இப்போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி டிராவில் முடிந்தாலோ, இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் பட்சத்தில் 4 புள்ளிகளுடன் எளிதாகப் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

ADVERTISEMENT

சிக்கல்

சீனா வெற்றி பெற்றால் உருவாகும் சிக்கலான சூழல்

ஒருவேளை சீனா நெதர்லாந்தை அதிர்ச்சித் தோல்வியடைய செய்தால் சூழல் முற்றிலும் சிக்கலாகும்.

சீனா வெற்றி பெற்றால் 3 புள்ளிகளுடன் வலுவான நிலையை அடையும்.

அந்த நேரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலும், கோல்கள் வித்தியாசம் அடிப்படையிலேயே எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பது தீர்மானிக்கப்படும்.

ADVERTISEMENT

சவால்

சலீமா டேடே தலைமையிலான இந்திய அணியின் சவால்

நெதர்லாந்திடம் அடைந்த தோல்வி இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், தொடரிலிருந்து வெளியேற்றும் அளவிலான பாதிப்பை உருவாக்கவில்லை.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்குவதற்கு முன்பே நெதர்லாந்து - சீனா போட்டியின் முடிவு தெரிந்துவிடும் என்பதால், எத்தனை கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் இந்திய அணி களமிறங்கும்.

தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவை வெல்வதும், நெதர்லாந்து தோற்காமல் இருப்பதும் மிக அவசியமாகும்.

ADVERTISEMENT