உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
மடகாஸ்கரில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு கர்னல் ராண்ட்ரியானிரினா அதிபராகப் பதவியேற்பு
முன்னாள் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா நாட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) மடகாஸ்கரின் புதிய அதிபராகப் பதவியேற்றார்.
காசாவில் தொற்று நோய்கள் எல்லையை மீறி பரவுகின்றன: WHO எச்சரிக்கை
காசா பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நவம்பர் 1 முதல் புதிய விதி அமல்: US விசா நேர்காணலை வெளிநாடுகளில் திட்டமிடுவது கடினம்
அமெரிக்க குடியேற்ற (Immigrant) மற்றும் குடியேற்றமற்ற (Non-Immigrant) விசா நேர்காணல்களை விண்ணப்பதாரர்கள் இனி தங்கள் சொந்த நாட்டில் அல்லது நிரந்தர வசிப்பிடத்தில் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் வைரலாகும் 93,000 பேண்ட்கள் 2.0; பின்னணி என்ன?
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடுமையான எல்லை மோதல்களுக்குப் பிறகு, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானின் கருத்துருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: வங்கதேச வழக்கறிஞர்கள் கோரிக்கை
கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை வன்முறையில் ஒடுக்கியதில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பங்கு குறித்து வங்கதேச வழக்கறிஞர்கள் மரண தண்டனை கோரி வருகின்றனர்.
ஹமாஸ் ஆதரவு செய்திகளால் அமெரிக்கா, கனடா விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டன
செவ்வாயன்று கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
2028 வரை அமெரிக்காவின் கிரீன் கார்டு விசாவிற்கான லாட்டரியில் இந்தியர்கள் பங்கேற்க முடியாது; காரணம் என்ன?
அமெரிக்காவின் பன்முகத்தன்மை விசா (DV) லாட்டரி திட்டத்தில் இந்திய நாட்டினருக்குக் குறைந்தபட்சம் 2028 ஆம் ஆண்டு வரை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
H-1B விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வழக்கு
அமெரிக்காவில் புதிய H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக (இந்திய மதிப்பில் சுமார் 83 லட்சம் ரூபாய்) அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உயர்த்தியதற்கு எதிராக, அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (U.S. Chamber of Commerce) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்: அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது.
காசா போர் ஓவர், அடுத்தது ரஷ்யா-உக்ரைன் போர்; புடினை நேரில் சந்திக்கவுள்ளார் டிரம்ப்
உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, புடாபெஸ்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான வயது வரம்பை உயர்த்திய சீனா
சீனா தனது வேலை சந்தையில் வயது பாகுபாட்டை சமாளிக்க புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆப்கான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பேண்ட்டை விட்டுவிட்டு ஓடிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்? வைரலாகும் காணொளி
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைப்பதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்; சீனாவிற்கும் நெருக்கடி தரப்போகிறாராம்!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முற்றிய பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல்; உதவிக்கு கத்தார், சவுதி அரேபியாவை தொடர்பு கொள்ளும் பாக்.,
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், தாலிபான் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட புதிய மோதல்கள் டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்க்வா எல்லையில் பாகிஸ்தான் - தாலிபான் இடையே மீண்டும் துப்பாக்கி சண்டை
பாகிஸ்தான் அரசு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, செவ்வாய்க்கிழமை இரவு கைபர் பக்துன்க்வாவில் உள்ள குர்ரம் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமெரிக்கா இல்லை; இந்தியாவின் இடம் எது தெரியுமா?
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 இன் படி, இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்காவின் பாஸ்போர்ட் உலகின் முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்திய வம்சாவளி பிரபல அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது: என்ன காரணம்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர், டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் தனிப்பட்ட எண்கள் இணையத்தில் கசிந்துள்ளன
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிப்பு; பள்ளிகள் தற்காலிகமாக மூடல்
மலேசியாவில் சுமார் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காசா அமைதி உச்சி மாநாட்டில் "நல்ல நண்பர்" மோடிக்கு புகழாரம் தந்த டிரம்ப்
எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை பாராட்டியதுடன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வந்ததற்காக 'பெருமை' தெரிவித்தார்.
தவறான தீர்ப்பால் அமெரிக்காவில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய அமெரிக்கர் விடுதலை; உடனே கைதுசெய்த குடியேற்றத்துறை
செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த சுபு எனும் சுப்ரமணியம் வேதம் (64), விடுதலையான உடனேயே அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.
நோபல் பரிசு உங்களுக்கு தான்: போர் நிறுத்த எதிரொலியாக டிரம்ப்பை புகழ்ந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு திங்களன்று இஸ்ரேலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆண்டிபயாடிக் எதிர்ப்புத் தொற்றுகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதாக WHO எச்சரிக்கிறது
உலகளவில் மருத்துவமனைகளில் Antibiotic-களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட பொதுவான தொற்றுகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு 2025: பொருளாதாரத்திற்கான விருது மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு
கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
'இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு எனது சுங்க வரி மிரட்டல்களே காரணம்': மீண்டும் டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில், தான் விதித்த பெரிய சுங்க வரிகளுக்கான அச்சுறுத்தலே தீர்க்கமான காரணியாக இருந்தது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
காசா ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது; முதல் தொகுதி இஸ்ரேலிய பிணைக்கைதிகள் ரெட் கிராஸிடம் ஒப்படைப்பு
காசாவிலிருந்து இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விடுதலை ஆரம்பமாகியுள்ளது.
பிரபல பாப் பாடகியை டேட் செய்யும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
பிரபல பாப் ஸ்டார் கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலிபோர்னியாவில் ஒரு படகில் முத்தமிட்டு அரவணைத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
அதிகரிக்கும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதிலடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் காபூலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
தாலிபான் பதிலடியை 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வலியுறுத்தல்
பாகிஸ்தானுடனான பதட்டத்தை அதிகரித்து, தாலிபான் படைகள் டூரண்ட் கோடு எல்லையில் நடத்திய பதில் தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) உரிமை கோரியது.
இந்தியா-ரஷ்யா கலாச்சார உறவுகளில் புதிய மைல்கல்; டெல்லியிலிருந்து அனுப்பிய புத்தரின் புனிதச் சின்னங்கள் கல்மியாவை அடைந்தது
இந்தியா-ரஷ்யா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, புத்தரின் புனிதச் சின்னங்கள் ரஷ்யாவின் கல்மியா குடியரசின் தலைநகரான எலிஸ்டாவை சென்றடைந்துள்ளன.
காசா அமைதி ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பும் ஹமாஸ்; எகிப்தில் நடைபெறும் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்குமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த புதிய காசா அமைதி ஒப்பந்தம், உடனடியாக சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
காபூல் தாக்குதலுக்கு பதிலடி; ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதில் நடந்த ஒரு பெரும் மோதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பாலஸ்தீனுக்கு ஆதரவான TLP பேரணியை தடுத்ததால் கடும் வன்முறை; 11 பேர் பலி
பாகிஸ்தானின் லாகூரில் சனிக்கிழமை (அக்டோபர் 11) அன்று, தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) இஸ்லாமிய அமைப்பின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி செல்வதைத் தடுக்கப் பாதுகாப்புப் படையினர் முயன்றபோது, பலத்த வன்முறை மோதல்கள் வெடித்தன.
முடிவுக்கு வருமா பிரான்ஸ் அரசியல் முட்டுக்கட்டை? செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்தார் இம்மானுவேல் மேக்ரான்
பிரான்ஸில் ஆழமடைந்து வரும் அரசியல் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நியமித்தார்.
சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
கோகோ தீவுகளில் சீனாவின் இருப்பு இல்லை என மியான்மர் இந்தியாவுக்கு உறுதி; கடற்படை ஆய்வுக்கான அனுமதி நிறுத்தம்
வங்காள விரிகுடாவில் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த கோகோ தீவுகளில் (Coco Islands) சீனாவின் ராணுவ இருப்பு எதுவும் இல்லை என்று மியான்மர் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது.
டொனால்ட் டிரம்பிற்கு சமர்ப்பணம்; அமைதிக்கான நோபல் வென்ற மச்சாடோ அறிவிப்பு
வெனிசுலாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான தனது போராட்டத்திற்காக 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மண்ணின் துணிச்சலை சோதிக்க வேண்டாம்: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த தலிபான் அமைச்சர்
ஆப்கானிஸ்தானின் தாலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம்; நோபல் குழு மீது அமெரிக்கா கடும் விமர்சனம்
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சிச் செயற்பாட்டாளரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நோபல் குழுவின் முடிவை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) கடுமையாக விமர்சித்துள்ளது.