
ஆப்கான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பேண்ட்டை விட்டுவிட்டு ஓடிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்? வைரலாகும் காணொளி
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைப்பதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இத்தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், ஆப்கானிஸ்தான் உடனடியாகப் பதிலடி கொடுத்தது. இரு நாடுகளின் எல்லைப் பகுதியான டூராண்ட் கோடு நெடுகிலும் உள்ள பல பாகிஸ்தான் இராணுவ நிலைகளைத் தாக்கிய ஆப்கானிஸ்தான், 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் விட்டுச்சென்ற பேண்ட் சீருடைகள் மற்றும் ஆயுதங்களை ஆப்கானியப் படைகள் காட்சிப்படுத்துவது போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
போர் நிறுத்தம்
48 மணிநேர போர் நிறுத்தம்
தங்கள் படைகள் பெரும் இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் புதன்கிழமை (அக்டோபர் 15) அன்று 48 மணி நேரப் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இந்த சிக்கலான பிரச்சினைக்கு, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் ஒரு நேர்மறையான தீர்வை காண இரு தரப்பினரும் உண்மையான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்தது. இருப்பினும், இந்தப் போர் நிறுத்தம் பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் தான் நிகழ்ந்தது என்று ஆப்கானிஸ்தான் தாலிபான் கூறியுள்ளது. எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் TTP பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அதன் மண் அண்டை நாடுகள் எதற்கும் எதிராகப் பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
‘Empty trousers’, recovered from abandoned military posts of Pakistani army near Durand Line displayed in eastern Nangrahar province, Afghanistan. pic.twitter.com/MvjAOsdCgC
— Daud Junbish 🇦🇫 (@DaudJunbish) October 14, 2025