
தாலிபான் பதிலடியை 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானுடனான பதட்டத்தை அதிகரித்து, தாலிபான் படைகள் டூரண்ட் கோடு எல்லையில் நடத்திய பதில் தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) உரிமை கோரியது. இந்த தாக்குதல் சமீபத்தில் பாகிஸ்தான் காபூல் மற்றும் பக்டிகாவில் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து பதிலடியாக நடத்தப்பட்டுள்ளது. தாலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் கோரிக்கையின் பேரில் தங்களுடைய தாக்குதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு அதன் எல்லைகளைப் பாதுகாக்கும் உரிமை இருப்பதாகவும் எச்சரித்தார். மேலும், சபிஹுல்லா முஜாஹித் முக்கியமானதொரு எச்சரிக்கையையும் பாகிஸ்தானிற்கு விடுத்தார்.
ஐஎஸ்ஐஎஸ்
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வலியுறுத்தல்
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள முக்கியமான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வெளியேற்ற வேண்டும் அல்லது ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்கள் வழியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட மையங்களில் பயிற்சி பெறுபவர்களும் இதில் அடக்கம் என்று முஜாஹித் கூறினார். ஐஎஸ்ஐஎஸ் இரு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் என்றும் தாலிபான் வலியுறுத்தியது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த பதிலடி மற்றும் வெற்றிகரமான நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியதுடன், எதிர்காலத்தில் எல்லை மீறல்கள் நடந்தால் கடுமையான பதில் அளிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியது.