LOADING...

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

2025ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ யார் தெரியுமா? 

வெனிசுலாவின் மிகவும் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

10 Oct 2025
நார்வே

டிரம்ப் மிகவும் எதிர்பார்த்த நோபல் பரிசு மிஸ் ஆனது! அவரது ரியாக்ஷனை எதிர்கொள்ள தயார் நிலையில் நார்வே

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டொனால்ட் டிரம்பிற்கு கிடைக்கவில்லை.

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 Oct 2025
தைவான்

சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தைவானின் பாதுகாப்பு அமைப்பான டி-டோம்

சீனாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாக, "டி-டோம்" என்று பெயரிடப்பட்ட ஒரு குவிமாடம் போன்ற வான் பாதுகாப்பு அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை தைவான் அறிவித்துள்ளது.

'ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை எதுமே செய்யாமல் வென்றார்': புலம்பும் டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முன்னோடி பராக் ஒபாமாவின் வெற்றியை தகுதியற்றது என்று கூறினார்.

தாலிபான் அமைச்சர் இந்தியா வந்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் வியாழக்கிழமை (அக்டோபர் 9) இரவு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆலோசகராக பணியில் சேர்ந்தார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் மற்றும் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) ஆகியவற்றில் பகுதி நேர ஆலோசகர் பொறுப்புகளை ஏற்றுள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்தது.

பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் எதுவும் வழங்கப்படவில்லை, ஆதரவு மட்டுமே: அமெரிக்கா கொடுத்த ட்விஸ்ட்

பாகிஸ்தானுக்கு மிகவும் மேம்பட்ட AIM-120 வான்வழி ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதான் நட்பு; ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு; வைரலாகும் வீடியோ

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு எல்லைச் சோதனைச் சாவடியில், ஒரு தாலிபான் எல்லைக் காவலர் இந்தியப் பயணி ஒருவருடன் அன்புடன் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியப் பயணிகளுக்கு எதிர்பாராத வகையில் காட்டும் நட்புறவைக் காட்சிப்படுத்தியுள்ளது.

அஜர்பைஜான் ஜெட் விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாதான்: விளாடிமிர் புடின் முதல்முறையாக ஒப்புதல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு 38 பேர் உயிரிழந்த ஒரு அஜர்பைஜான் ஜெட் விமானத்தை ரஷ்ய விமானப் பாதுகாப்பு அமைப்புகளே சுட்டு வீழ்த்தியதாக வியாழக்கிழமை (அக்டோபர் 9) ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்க்கு 2025 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஹங்கேரிய எழுத்தாளரான லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்க்கு (László Krasznahorkai) 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான உறவுகள் மேம்பட்டு வருவதைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, AIM-120 மேம்பட்ட நடுத்தர-வரம்பு வான் முதல் வான் ஏவுகணை (AMRAAM) விற்பனைக்கான ஆயுத ஒப்பந்தத்தில், பாகிஸ்தானையும் பெறுநராக அமெரிக்காவின் போர் துறை (DoW) சேர்த்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் பெண்கள் பிரிவு ஜமாத்-உல்-மோமினாத் உருவாக்கம்

மசூத் அஸார் தலைமையிலான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தீவிரவாத அமைப்பு, தனது செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, தனது முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் என்ற பெயரில் உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

09 Oct 2025
சீனா

தவளையை உயிரோடு விழுங்கினால் முதுகுவலி சரியாகி விடும்? 8 தவளைகளை விழுங்கிய பாட்டிக்கு நேர்ந்த சோகம்

சீனாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் முதுகு வலியைப் போக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2025 அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு? காசா போரை நிறுத்திய டிரம்ப்புக்கா?

உலகின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு பெற விரும்பும் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்தாலும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டில் பரிசு பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

09 Oct 2025
காசா

காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் உடன்பாடு: டிரம்ப்

காசாவில் சண்டையை நிறுத்தி, பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

பாகிஸ்தானுக்கு வான் ஏவுகணைகளை அளிக்க போவதாக அமெரிக்கா அறிவிப்பு

பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை (DoD) அறிவித்துள்ளது.

08 Oct 2025
உக்ரைன்

ரஷ்ய ராணுவத்திற்காக போராட சென்ற இந்தியர் உக்ரைன் படைகளால் பிடிப்பட்டார்

உக்ரைனின் 63வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவு, இந்திய நாட்டவரான மஜோதி சாஹில் முகமது ஹுசைனை கைப்பற்றியதாக கூறியுள்ளது.

நோபல் பரிசு பெற்றவரை தேடும் நிர்வாக குழு; விருது பெற்றதை கூட அறியாமல் ஹாலிடே சென்ற விஞ்ஞானி!

இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களில் ஒருவரான பிரெட் ராம்ஸ்டெல் என்பவரை தற்போது தொடர்பு கொள்ள முடியாமல் நிர்வாக குழு தவித்து வருகிறது.

ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீண்டும் தாக்குதல்: குண்டுவெடிப்பில் 6 பெட்டிகள் தடம் புரண்டன

பெஷாவரில் இருந்து குவெட்டா செல்லும் பயணிகள் ரயிலான ஜாஃபர் எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமை மீண்டும் குறிவைக்கப்பட்டது.

07 Oct 2025
அமெரிக்கா

போதை வஸ்து பெயரில் சென்ட் பாட்டில் வைத்திருந்ததற்காக அமெரிக்கா விசாவை இழந்த இந்தியர்

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கபில் ரகு, "ஓபியம்" என்று பெயரிடப்பட்ட வாசனை திரவிய பாட்டிலைப் பற்றி அதிகாரிகளின் தவறான புரிதலினால் ரத்து செய்யப்பட்ட தனது விசாவை மீண்டும் பெற போராடி வருகிறார்.

07 Oct 2025
அமெரிக்கா

'நாங்கள் அமைதி காக்கும் படையினராக இருப்பதற்குக் காரணம்...': இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் மீண்டும் பிதற்றல் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கைகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தவிர்க்க உதவியதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.

அரிய கனிமங்களின் முதல் தொகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது பாகிஸ்தான்: ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை

அமெரிக்க நிறுவனமான யுஎஸ் ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸுடன் (யுஎஸ்எஸ்எம்) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது முதல் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

06 Oct 2025
பிரான்ஸ்

வெறும் 27 நாட்கள் தான்: பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு ராஜினாமா

27 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த பிறகு பதவி விலகிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் ராஜினாமாவை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏற்றுக்கொண்டார்.

அரசாங்க முடக்கம் தொடர்ந்தால் பெருமளவிலான பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை

பகுதி அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக காங்கிரஸ் ஜனநாயக கட்சியினருடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வெற்றிபெறவில்லை என்றால், கூட்டாட்சி ஊழியர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் நண்பனை கொல்வது எப்படி என சாட்ஜிபிடியில் தேடிய பள்ளி மாணவன் கைது

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 13 வயது இளைஞன் ஒருவன், பள்ளி வழங்கிய சாதனத்தைப் பயன்படுத்தி ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியிடம் வகுப்பறையின் நடுவில் நண்பரைக் கொல்வது எப்படி என்று கேட்டதால் கைது செய்யப்பட்டுள்ளான்.

06 Oct 2025
காசா

காசா பேச்சுவார்த்தையை விரைவாக முடிங்க, இல்லைனா 'இரத்தக்களரி ஆகும்': எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

திங்கட்கிழமை காசாவிற்கான அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பேச்சுவார்த்தையாளர்கள் "விரைவாக முன்னேற வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

06 Oct 2025
திபெத்

எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்புயலில் 1,000 பேர் சிக்கிக் கொண்டனர்; மீட்புப் பணிகள் தீவிரம்

திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கு சரிவுகளில் ஒரு கடுமையான பனிப்புயல் கிட்டத்தட்ட 1,000 பேரை சிக்க வைத்துள்ளது.

06 Oct 2025
சிரியா

அசாத்துக்குப் பிந்தைய சிரியாவில் முதல் நாடாளுமன்றத் தேர்தல்; புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிரியா தனது அரசியல் மாற்றத்தில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது.

05 Oct 2025
நேபாளம்

கனமழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 51 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கிழக்கு நேபாளம் முழுவதும் பெய்து வரும் தீவிர பருவமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

05 Oct 2025
ஜப்பான்

ஜப்பானில் முதல் முறையாக பெண் பிரதமராக தேர்வு; யார் இந்த இரும்புப் பெண்மணி சனே டகாயிச்சி?

ஜப்பானின் அரசியல் களத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைமைப் பதவிக்கு, தீவிர பழமைவாதியும் முன்னாள் உள்விவகார அமைச்சருமான சனே டகாயிச்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈரான் எல்லை அருகே அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அழைப்பு

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்குமான உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அரபிக் கடலில் ஒரு துறைமுகத்தை அமைத்து இயக்குவதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது.

05 Oct 2025
இஸ்ரேல்

காசாவில் ஆரம்பகட்டப் படைகள் விலகல் எல்லைக்கு இஸ்ரேல் ஒப்புதல்; ஹமாஸை உடனடியாக செயல்பட டிரம்ப் வலியுறுத்தல்

இஸ்ரேல்-காசா மோதலில் ஒரு முக்கிய இராஜதந்திர முன்னேற்றம் உடனடியாக ஏற்பட வாய்ப்புள்ளது.

அடிபணிந்து பாகிஸ்தான் அரசு; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஏற்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, 12 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீஃப் அரசு ஜம்மு காஷ்மீர் கூட்டு அசாமி செயல் குழுவுடன் (JKJAAC) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடி

சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த இரு இந்தியர்களான, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27), விடுதி அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.

04 Oct 2025
உக்ரைன்

உக்ரைனின் ரயில் நிலையம் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்; 30 பேர் காயம்

உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் உள்ள ஷோஸ்ட்கா ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி; ஹமாஸுக்கு கெடு விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் அமைதித் திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி (வாஷிங்டன், டி.சி. நேரம்) வரை காலக்கெடு விதித்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

டிரம்பின் காசா அமைதி திட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பதறிய பாகிஸ்தான்

இஸ்ரேல் ஹமாஸ் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை பாகிஸ்தான் பகிரங்கமாக நிராகரித்துள்ளது.

நோபல் பரிசு வென்றவர்கள் பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது

நோபல் பரிசு வென்றவர்கள் அடுத்த வாரம் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அறிவிக்கப்படுவார்கள்.