LOADING...
டிரம்பின் காசா அமைதி திட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பதறிய பாகிஸ்தான்
டிரம்பின் காசா திட்டத்தில் தங்களுக்கு சம்பந்தமில்லை என பாகிஸ்தான் அறிவிப்பு

டிரம்பின் காசா அமைதி திட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பதறிய பாகிஸ்தான்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 03, 2025
08:25 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் ஹமாஸ் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தை பாகிஸ்தான் பகிரங்கமாக நிராகரித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக பாகிஸ்தான் தனது சொந்த வரைவுப் பதிவை முன்மொழிந்ததாகவும், டிரம்ப் பகிரங்கப்படுத்திய திட்டம் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இல்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தார் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் தெரிவித்தார். "அதிபர் டிரம்ப் வெளியிட்ட 20 அம்சங்கள் எங்களுடையது அல்ல என்பதை நான் தெளிவுபடுத்தினேன். எங்கள் வரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டன." என்று இஷாக் தார் கூறினார்.

பாராட்டு

டிரம்ப் பாராட்டு

முன்னதாக, டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரைத் தனது அமைதி முயற்சிக்கு ஆதரவளித்ததற்காக பாராட்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த மறுப்பு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. ஐநா பொதுச் சபை அமர்வின்போது, காசா போர் தொடர்பாக டிரம்புடன் ஏழு முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தை இஷாக் தார் விவரித்தார். இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் 20 அம்சத் திட்டத்தை முன்வைத்தனர், அதை இஸ்லாமிய நாடுகள் திருத்தி வழங்கியதாக இஷாக் தார் கூறினார்.