
பிரபல பாப் பாடகியை டேட் செய்யும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
செய்தி முன்னோட்டம்
பிரபல பாப் ஸ்டார் கேட்டி பெர்ரியும், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலிபோர்னியாவில் ஒரு படகில் முத்தமிட்டு அரவணைத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவர்களின் டேட்டிங் வதந்திகளை உறுதிப்படுத்தும் இந்தப் புதிய வைரல் படங்கள், மாண்ட்ரீலில் அவர்களின் முதல் பொதுப் பயணத்திற்குப் பிறகு சில மாதங்களுக்குப் பிறகு வந்தன. ஆன்லைனில் வெளியான வைரல் போட்டோக்கள், இருவரும் ஒன்றாக உணவருந்துவதையும் காட்டியது. இது பல மாதங்களாக ஊடகத்தில் வெளியான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிகிறது.
விவரங்கள்
தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்ட காதல் ஜோடி
இந்த ஜோடி முதன்முதலில் இந்த ஆண்டு ஜூலை மாதம் மாண்ட்ரீலில் ஒரு இரவு விருந்தின் போது ஒன்றாகக் காணப்பட்டனர். அதன் பிறகு ட்ரூடோ கனடாவில் கேட்டி பெர்ரியின் 'லைஃப்டைம்ஸ்' சுற்றுப்பயண நிகழ்விலும் கலந்து கொண்டார். கேட்டி பெர்ரியின் தனிப்பட்ட வாழ்க்கையும் சமீபத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. பல ஆண்டுகள், நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடனான தனது உறவை, கடந்த ஜூன் 2025 இல் பாடகி முடித்துக் கொண்டார். இதற்கிடையில், ஜஸ்டின் ட்ரூடோ, 18 வருட திருமணத்திற்கு பிறகு ஆகஸ்ட் 2023 இல் தனது மனைவி சோஃபி க்ரோகோயர் ட்ரூடோவை பிரிவதாக அறிவித்தார். இந்த தம்பதியினருக்கு சேவியர், 17, எல்லா-கிரேஸ், 16, மற்றும் ஹாட்ரியன், 11 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.