LOADING...
காபூல் தாக்குதலுக்கு பதிலடி; ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி
ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

காபூல் தாக்குதலுக்கு பதிலடி; ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 12, 2025
08:16 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதில் நடந்த ஒரு பெரும் மோதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை மோதல், டோலோ நியூஸ் மூலம் அறிவிக்கப்பட்டு, ஆப்கானிய பாதுகாப்பு அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சமீபத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆப்கானியப் படைகளின் நேரடி பதிலடியாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் மூத்த தளபதிகளை இலக்கு வைத்து, அக்டோபர் 9 அன்று ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதையடுத்து இந்த பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஆப்கானியப் படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், ஆப்கானியப் பாதுகாப்பு அமைச்சகம் குனார் மற்றும் ஹெல்மண்ட் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள பல பாகிஸ்தான் முகாம்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை கைப்பற்றி அழித்ததாகவும் தெரிவித்துள்ளது.

வெற்றி 

தாக்குதல் வெற்றி என ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

தாலிபான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், வெற்றிகரமான நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார். ஆனால், எதிர்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்குள் அத்துமீறினால், எங்கள் ஆயுதப் படைகள் தங்கள் நிலப்பரப்பைப் பாதுகாக்கத் தயாராக உள்ளன, மேலும் உறுதியான பதில் அளிக்கும் என்று கடுமையாக எச்சரித்தார். 2021 இல் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான மிக மோசமான பதற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வன்முறைச் சம்பவம், ஆப்கானிய வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி, இந்தியாவுக்கு மேற்கொண்ட எட்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்திற்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.