LOADING...
மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிப்பு; பள்ளிகள் தற்காலிகமாக மூடல்
பாதுகாப்பு கருதி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மலேசியாவில் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிப்பு; பள்ளிகள் தற்காலிகமாக மூடல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2025
01:09 pm

செய்தி முன்னோட்டம்

மலேசியாவில் சுமார் 6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் முகமட் அசாம் அகமது இது குறித்துத் திங்களன்று பேசுகையில், "கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் தொற்று நோய்களை கையாள்வதில் எங்களுக்கு ஏற்கனவே விரிவான அனுபவம் உள்ளது" என்று கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, முகக்கவசங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், மாணவர்களிடையே பெரிய குழு நடவடிக்கைகளைக் குறைத்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகரிப்பு

தொற்றுப் பரவல் அதிகரிப்பு

மூடப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த வாரம் நாடு முழுவதும் 97 இன்ஃப்ளூயன்ஸா கிளஸ்டர்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வாரத்தில் 14 ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொற்றுக் குழுக்களில் பெரும்பாலானவை பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் பதிவாகியுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பிற்காக கல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.