03 Mar 2024

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழக வானிலை: மத்திய பிரதேசத்தில் இருந்து வடக்கு கர்நாடகா வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது 

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் தன் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது உடலுடன் 4 நாட்கள் வாழ்ந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதய நோய் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் அன்றாட உணவு வகைகள் 

அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவு (UPF) என்ற கூறப்படும் உணவுகள் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், மனநல பாதிப்பு உள்ளிட்ட சுமார் 32 ஆரோக்கிய கேடுகளையும் தீங்கு விளைவிக்கும் நோய்களையும் உண்டாக்க வல்லது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி:

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடையாக வழங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கட்சிக்கு அனைவரும் பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அம்பானி இல்ல திருமண விழாவில் மனைவி மற்றும் மகளுடன் ரஜினிகாந்த் பங்கேற்பு

இன்று ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் ஜாம்நகரில் இறங்கினார்.

தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் சதம் விளாசினார் மும்பையின் ஷர்துல் தாகூர்

இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இன்று ரஞ்சி டிராபி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடும் போது தனது முதல் சதத்தை அடித்தார்.

அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம்  ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி

அதிகமான தேவை காரணமாக இந்தியாவின் வாகன சந்தை பிப்ரவரி 2024 இல் அதிகமான வளர்ச்சியைக் கண்டது.

பாகிஸ்தானின் 33வது பிரதமராக பதவியேற்க உள்ளார் ஷெபாஸ் ஷெரீப் 

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஷெபாஸ் ஷெரீப், இன்று இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி

நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த இரும்பு கூரை கிரில் விழுந்ததால் இன்று குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம் 

மும்பையில் இந்திய ஏஜென்சிகளால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் கப்பலில் "வணிக" பொருட்கள் தான் இருந்தது என்றும், அணுசக்தி திட்டத்திற்கான இயந்திரங்கள் அவை அல்ல என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.04% குறைந்து $61,943.72க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 19.9% உயர்வாகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 3

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 3, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில் 

தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூவின் இந்திய ஊடகச் சேனலுக்கு பேட்டியளித்தது குறித்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

மக்களவை தேர்தல்: பதவியில் இருக்கும் 33 எம்பிக்களுக்கு மாற்றாக புதிய முகங்களை நிற்க வைக்க இருக்கும் பாஜக 

பல்வேறு மாநிலங்களில் பெரும் மாற்றங்களுடன், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.

02 Mar 2024

மக்களவைத் தேர்தல்: பிரதமர் மோடி மற்றும் 34 அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களை வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை கீழைக்காற்று /வடகிழக்கு காற்று நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு 

சேவைக் கட்டணங்கள் தொடர்பான சர்ச்சையில், பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட இந்திய மொபைல் ஆப்களை மீட்டெடுப்பதற்கான செயல்முறையை கூகுள் தொடங்கியுள்ளது.

பிப்ரவரியில் மட்டும் 35,000 முன்பதிவுகள்: ஓலா எலக்ட்ரிக் சாதனை 

பிப்ரவரி 2024இல் மட்டும் 35,000 முன்பதிவுகளை எட்டி ஓலா எலக்ட்ரிக் மாதாந்திர பதிவுகளில் ஒரு பெரிய எழுச்சியை கண்டுள்ளது.

'இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது': மத்திய அரசு 

கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து சில இந்திய ஆப்களை நீக்கியது குறித்து இன்று பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ஆப்கள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

குடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு

ஐந்து இந்திய வம்சாவளி சகோதரர்கள் சம்பந்தப்பட்ட ஒரு குடும்ப பகை வழக்கில் அமெரிக்க நடுவர் மன்றம் பல பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை கூட்டுப் பலாத்காரம் செய்த ஜார்கண்ட் ஆசாமிகள் கைது 

பைக் சுற்றுப்பயணமாக தனது கணவருடன் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுவரின் மீது தூக்கி எறியப்பட்ட பிறந்த குழந்தை வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஹரியானாவில் கொடூரம் 

ஹரியானாவின் அஜ்ரோண்டா கிராமத்தில் நேற்று இரவு, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் சுவரில் இருந்த கிரில்லில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.95% உயர்ந்து $62,078.43க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 21.8% உயர்வாகும்.

ஆனந்த் அம்பானியின் 'ப்ரீ வெட்டிங்' நிகழ்ச்சியில் பாடிய பிரபல பாப் இசை பாடகி ரிஹானா 

நேற்று இரவு குஜராத்தின் ஜாம்நகரில் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் 'ப்ரீ வெட்டிங்' நிகழ்ச்சி நடைபெற்றது.

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர்

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக எம்பி கவுதம் காம்பீர் தீவிர அரசியலில் இருந்து விலகல்

பாரதிய ஜனதா கட்சி எம்பி கவுதம் காம்பீர், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்வு 

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 2, 2024 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது.

காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு 

பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேக நபரின் வீடியோ 

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேக நபர், தீவிர வெடிகுண்டு சாதனத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையுடன் உணவகத்தை நோக்கி நடந்து செல்வதை காட்டும் புதிய சிசிடிவி காட்சிகள் இன்று வெளிவந்துள்ளன.