Page Loader
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Mar 03, 2024
02:49 pm

செய்தி முன்னோட்டம்

நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த இரும்பு கூரை கிரில் விழுந்ததால் இன்று குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ப்ளூ சபையர் மால் என்ற வணிக வளாகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கூரை கிரில் விழுந்ததால் ஹரேந்திர பாடி(35) மற்றும் ஷகீல்(35) என அடையாளம் காணப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் காஜியாபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது சம்பவ இடத்தில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாலின் ஐந்தாவது மாடியில் இருந்து அந்த இரும்பு கிரில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

கிரேட்டர் நொய்டாவில் விபத்து